2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

பாரம்பரியங்களை காப்பது தமிழர்களின் கடமையாகும்

Niroshini   / 2016 ஒக்டோபர் 02 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.மகாதேவன்

இந்து மக்களின் கலை நிகழ்வுகள், அவர்களின் பாரம்பரிய  நடவடிக்கைகள் இவற்றை நாம் பாதுகாப்பது எமது தமிழ் மக்களின் கட்டாய கடமையாகும். அதனை நாங்கள் கட்டாயம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.

உடப்பு கிராமத்தில் கிராமியக் கலைகளின் கதம்பம் நிகழ்ச்சி, இந்து மத கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் சனிக்கிழமை (01) உடப்பு இந்து கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

அமைச்சர் தொடர்ந்து அங்கு உரையாற்றும்போது,

பிரதேசத்துக்கும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அவர்களுடைய மொழிகள்  வேறாக இருக்கும். அதேநேரத்தில், இந்த உடப்பு கிராமத்தில் பல்வகையான கலை - கலாசார நிகழ்வுகள், மட்டக்களப்பு உடப்பு கலைஞர்கள் முன்னெடுத்து வருவது மிகவும் பாராட்டக்கூடியது.

இப்படியான ஒரு கலை நிகழ்ச்சியை ஆரம்பித்து இந்தக் கலையின் மூலமாக தமிழ் மக்களுக்கு ஒரு புத்துணர்வு கிடைக்க வேண்டும் என்பது தான் இவர்களின் அவாவாகும். சிலர் கூறுகின்றார்கள், இந்து மதத்தை விட்டு மற்றைய மதத்துக்கு செல்கின்றோம் என்று.

அந்த வகையில், நான் பல மேடைகளில் பேசி இருக்கின்றேன். இந்து மதத்தை விட்டு மற்றைய மதங்களுக்குபோவது காரியமில்லை. இந்து மதத்தினுடைய பிரதிபளிப்பு, இந்து மதத்தை போதிப்பது இந்து மதத்தினரின் கடமையாகும்.

குருக்கள் ஐயா இந்து மதத்தை போதிக்கும் பாடசாலை ஆசிரியர்களுக்கும் அந்த இந்து மதத்திலே இருக்கும் அரிய பொக்கிஷத்தை, வெளிப்படையாகக் கூறினால் அவர்கள் வேறு மதத்துக்குபோவதற்கு இடமில்லை எனலாம்.

அது எங்களுடைய பிழை. எங்களுடைய நடத்தை சரியாக இருந்தால் இப்படியான மதம் மாறும் பிரச்சினைகள் நடக்காது. எனினும், இன்று எமது மதத்தை நாம் பாதுகாப்பது எமது கடமையாகும். அந்த வகையில் இப்படியான கலை நிகழ்ச்சிகள் மற்றும் இந்து மதத்தின் முக்கியத்துவம் போன்ற கலை விழாக்கள்  கலைகள் எல்லாம் வளர்ந்து வந்தால் எமது இந்து மதமும் தமிழும் தழைத்து ஓங்கும் என்பது சந்தேகமில்லை என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X