Princiya Dixci / 2017 மே 10 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
ஹிரான் பிரியங்கர ஜயசிங்க, ரஸீன் ரஸ்மின்
பத்தலங்குண்டு தீவுக்கு அருகில், மீன்பிடி படகொன்று கவிழந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளாரென, பத்தலங்குண்டு தீவு பொலிஸார் தெரிவித்தனர்.
55 வயதுடைய வர்ணக்குலசூரிய ஜோசப் பெர்ணான்டோ என்ற மீனவரே, இவ்வாறு காணாமற்போயுள்ளாரெனத் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றுக் காலை 8.30 மணியளவில், மீன்பிடித் தொழிலுக்காகச் சென்று மீண்டும் திரும்பிக்கொண்டிருக்கும் போதே, அவரது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, இரண்டு மீனவர்கள் கடல் அலையில் அள்ளுண்டுச் சென்ற நிலையில், கடற்படையினர் மற்றும் ஏனைய மீனவர்களின் உதவியுடன் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். எனினும் மற்றைய மீனவர், இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனத் தெரிவித்த பொலிஸார், காணாமற்போன மீனவரைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையை கடற்படையினர் மற்றும் மீனவர்கள் முன்னெடுத்துள்ளதாகக் கூறினர்.

.jpg)
11 minute ago
14 minute ago
32 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
14 minute ago
32 minute ago
39 minute ago