2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

பலத்த காற்றினால் 300க்கு அதிகமான வீடுகள் சேதம்

Editorial   / 2020 ஏப்ரல் 16 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிரன் பிரியங்கர

புத்தளத்தின் பல்வேறு பகுதிகளை ஊடறுத்து நேற்று (15) பி.ப 4.00 மணிக்கு வீசிய பலத்த காற்றின் காரணமாக, 300 க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதாக, புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

ஆனமடுவ, புத்தளம், கருவலகஸ்வ, நவத்தேகம ஆகிய பகுதிகளிலேயே, வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காற்றினால் பாரிய மரங்கள் மின் கம்பங்களில்  முறிந்து விழுந்துள்ளதையடுத்து, சுமார் 40 கிராமங்களைச் சேர்ந்த 15,000 க்கு மேற்பட்டோருக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .