Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
George / 2017 ஜூன் 13 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஹிரான் பிரியங்கர ஜயசேகர
புத்தளம் நகரத்தில் காணப்படும் பாதசாரிகள் நடைபாதை, அங்குள்ள பழ வியாபாரிகளால் முழுமையாக கைப்பற்றப்பட்டுள்ளதுடன், வீதியின் ஒரு பகுதியையும் ஆக்கிரமித்து வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
புத்தளம் பழைய வணிக வளாகத்துக்கு பயணிப்பதற்கு உருவாக்கப்பட்டுள்ள பாதசாரி நடைபாதையில் 50 மீற்றருக்கும் அதிகளவில் முழுமையாக மூடப்பட்டு, கடந்த சில மாதங்களாக பழ வியாபாரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இவ்வாறு நடைபாதையில் கடைகளை அமைத்துள்ள இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் மௌனமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நடைபாதையை இவர்கள் ஆக்கிரமித்துள்ளதாக வீதியில் நடந்துசெல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாவும், நடந்துசெல்வதற்காக வீதியின் ஓரத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தையும் தற்போது பழ வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago