2025 மே 05, திங்கட்கிழமை

பொதுபலவின் அலுவலகத்திலிருந்து முக்கிய ஆவணங்கள் மீட்பு

Editorial   / 2017 ஜூன் 18 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் இனப்பிரச்சினையை ஏற்படுத்தும் வகையிலான பதாதைகள் மற்றும் சுவரொட்டிகள் என்பவற்றை, குருநாகல், வெல்லவ பிரதேசத்திலுள்ள கடையொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.

குரு­நாகல், மல்­ல­வ­பி­ட்டிய முஸ்லிம் பள்­ளி­வாசல் மீது பெற்றோல் குண்டுத் தாக்­குதல் மேற்கொள்ளப்பட்டச் சம்­பவம் தொடர்பில் கைதுசெய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள பொது­பல சேனா அமைப்பின் உறுப்பினர்கள் எனத் தெரி­விக்­கப்­படும் இரு­வரில் ஒரு­வ­ருக்குச் சொந்தமானதெனக் கூறப்படும் கடையொன்றின் அறையிலிருந்தே, மேற்படி ப​தாதைகள் மற்றும் சுவரொட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த மே மாதம் 21ஆம் திகதி அதிகாலை வேலையில் மேற்கொள்ளப்பட்ட குருநாகல் பள்­ளி­வாசல் மீதான தாக்­குதல் சம்­பவத்­துடன் தொடர்புடைய சந்தேகநப­ர்கள் ஊடாகவே, நாட்டில் இனக்கலவரத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக, பொலிஸ் ஊட­கப் ­பி­ரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது பத்­தி­ரி­கைகள், சுவ­ரொட்­டிகள், ஆவ­ணங்கள், இறு­வட்­டுக்கள் உள்­ளிட்ட 486 பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் இனங்கள் மற்றும் மதங்­க­ளுக்கு இடையில் விரி­சலை ஏற்­ப­டுத்தும் வகையிலான சுலோகங்கள் எழு­தப்­பட்­டி­ருந்த­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

குறித்த சந்தேகநபர்கள் இருவரும், நாளை (19) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X