2025 மே 05, திங்கட்கிழமை

போலி ஆவணங்களை தயாரித்த நபருக்கு விளக்கமறியல்

George   / 2017 ஜூன் 13 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

போலி சாரதி அனுமதி பத்திரம் தயாரித்த குற்றத்தில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர், எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பொல்கஹாவெல, மெட்கும்புற பிரதேசத்தில் போலி சாரதி அனுமதி பத்திரம் தயாரிக்கும் இடத்தை சுற்றிவளைத்த பொலிஸார், சந்தேக நபரொருவரை நேற்று கைதுசெய்துள்ளனர்.

அலவ்வ பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அலவ்வ பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொலிஸார், வாகனச் சோதனையில் ஈடுபட்ட போது, அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி, ஓட்டுநரின் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் சோதனை செய்தபோது, அது போலியானது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஓட்டுநரிடம் மேற்கொண்ட விசாரணையின்போது, குறித்த அனுமதிப்பத்திரம் போலியானது என்றும் அதனை தயாரிக்கும் இடம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதனையடுத்து, மெட்கும்புற பிரதேசத்தில் உள்ள வீடொன்றை பொலிஸார் சோதனை செய்தபோது, போலியான முறையில் தயாரிக்கப்பட்ட வாகன இலக்கத் தகடுகள் 4, போலி இறப்பர் முத்திரை 3, தேசிய அடையாள அட்டை 3, சாரதி அனுமதிப்பத்திரம் 9 மற்றும் ​போலியான கடிதங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், அந்த வீட்டில் வசித்த 47 வயதுடைய நபர் சந்தேகத்தின்​பேரில் கைதுசெய்யப்பட்டதுடன், பொல்கஹாவெவ மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X