2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

மோசடி செய்த பெண்ணுக்கு விளக்கமறியல்

Gavitha   / 2017 ஏப்ரல் 01 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான்

நீர்கொழும்பிலுள்ள இரண்டு பிரபல பாடசாலைகளில், மாணவர்களுக்கு அனுமதி பெற்றுத் தருவதாக கூறி, 10 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த பெண்ணை, எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீர்கொழும்பு பிரதான நீதவான் ருச்சிர வெலிவத்த, நேற்று (31) உத்தரவிட்டார்.

நீர்கொழும்பில் உள்ள, பிரபல ஆண்கள் மற்றும் பெண்கள் பாடசாலைகள் இரண்டுக்கு, தரம் ஒன்று முதல் தரம் ஆறு வரையான வகுப்புகளுக்கு மாணவர்கள் 5 பேருக்கு  அனுமதி பெற்றுத் தருவதாக, வாக்குறுதி வழங்கி, பெற்றோர்களிடமிருந்து 10 இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட தொகையைப் பெற்று, மோசடியில் ஈடுபட்ட பெண், ​பெற்றோரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்​து, கைது செய்யப்பட்டிருந்தார்.

வடக்கு கதிரானை , தெமங் சந்தியைச் சேர்ந்த பெண்ணே, இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஆவார். சந்தேக நபர், பெற்றோர்களிடம் நேரடியாகவும் வங்கி கணக்கினூடாகவும் பணத்தை பெற்றுள்ளமை, ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X