2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

மின் துண்டிக்கப்படுவதாக மக்கள் விசனம்

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 11 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

புத்தளம் பிரதேச சபைக்குட்பட்ட பாலாவி அல்காசிமி சிட்டி கிராமத்தில், அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதாக, பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறித்த பிரதேசத்தில் எதுவிதமான முன் அறிவித்தலுமின்றி இவ்வாறு இரவு நேரங்களில் மின்சாரம் துண்டிக்கப்படுவதால், தாம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் பாடசாலை மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதுடன், தமது அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதிலும் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இப்பிரதேசத்தில் அடிக்கடி திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதால், இவ்வாறு இரவு நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்படுவதால், இத்திருட்டுச் சம்பவங்கள் மேலும் அதிகரிக்கக் கூடிய நிலை காணப்படுவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

எனவே, இதுகுறித்து இலங்கை மின்சார சபையின் புத்தளம் மற்றும் வடமேல் மாகாண காரியாலயங்கள், இது தொடர்பில் உரிய கவனம் செலுத்த வேண்டுமென, பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X