Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 ஜனவரி 03 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின், ஹிரான் பிரியங்கர ஜயசிங்க
கற்பிட்டிப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மின்சாரத் துண்டிப்புக்கு எதிராக அப்பிரதேசவாசிகள், இன்று (03) ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர்.
கற்பிட்டிப் பிரதேச சபைக்கு முன்பாக ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், விவசாயிகள், மீனவர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
பிரதேச செயலகம்வரை மக்கள் பேரணியாகச் சென்றபோது, கற்பிட்டி -பாலாவி வீதி ஊடான போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டோர் தெரிவிக்கையில், 'புத்தளம், கல்லடிப் பிரதேசத்திலிருந்து பாரிய மின்மாற்றிகள், கற்பிட்டி ஊடாக கடல் மார்க்கமாக வெளிநாடு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கல்லடிப் பிரதேசத்தில் 8 மின்மாற்றிகள் காணப்படுவதுடன், ஒரு மின்மாற்றியைக் கற்பிட்டி பிரதேசத்துக்குக் கொண்டு செல்வதற்கு மூன்று நாட்கள் எடுக்கின்றன.
கல்லடியிலிருந்து மின்மாற்றிகளைக் கற்பிட்டிக்குக் கொண்டு செல்லும்போது, முழு நாளும் கற்பிட்டிப் பிரதேசத்தில் மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும் இதனால், நாம் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றோம். தொடர்ச்சியாக முழு நாளும் மின் துண்டிப்பை மேற்கொள்வதால், நாம் பொருளாதார ரீதியில் பாதிப்படைகின்றோம்.
ஆர்ப்பாட்ட இடத்துக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி, ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடினார்.
அத்துடன், மின் துண்டிப்புப் பிரச்சினை தொடர்பாக மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, பிரதி அமைச்சர் அஜித் பி.பெரேரா, அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் தொடர்புகொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் தெரியப்படுத்தினார்.
இதனை அடுத்து, கற்பிட்டிப் பிரதேசத்துக்கு இன்று (04) கொழும்பிலிருந்து வருகை தரும் அதிகாரிகள், பிரதேச செயலகத்தில் கலந்துரையாடல் நடத்தவுள்ளனர்.
இந்நிலையில், மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தாமல் மின்மாற்றிகளைக் கட்டம் கட்டமாக கொண்டு செல்லும் வகையில் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினரிடம் அமைச்சர், பிரதி அமைச்சர், அமைச்சின் செயலாளர் ஆகியோர் வாக்குறுதி அளித்தனர்.
இது தொடர்பில் ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் தெரியப்படுத்தியதை அடுத்து, பேரணியில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.
8 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago