Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 டிசெம்பர் 04 , மு.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளிச்சாக்குளம் பிரதேசத்தில் மீன் விற்பனையில் ஈடுபட்ட பெண் வியாபாரியின் தொழிலுக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ், பொலிஸாரினால் வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை பிணையில் விடுதலை செய்யுமாறு புத்தளம் மாவட்ட பதில் நீதவான் எம்.முஹம்மட் இக்பால், நேற்று (03) உத்தரவிட்டார்.
சந்தேகநபரை, 3 இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில் விடுதலை செய்யுமாறும், எதிர்வரும் ஜனவரி மாதம் 17ஆம் திகதி நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜராகுமாறும், பதில் நீதவான் உத்தரவிட்டார்.
குறித்த பெண்ணிடம், அதே பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் சுமார் 6,000 ரூபாய் வரையில் கடனுக்கு மீன்களை வாங்கி வந்துள்ளார்.
இந்நிலையில், மேற்குறிப்பிட்ட நபர், மீண்டும் மீன்களைக் கடனாகக் கேட்டுள்ளார். இதற்கு, முன்னர் கொடுக்க வேண்டிய கடன் பாக்கியைக் கொடுத்துவிட்டு மீன்களைப் பெற்றுக்கொள்ளுமாறு, அந்த மீன் வியாபாரியான பெண் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில்ஆத்திரமுற்ற குறித்த நபர், அந்தப் பெண் விற்பனைக்கான வைத்திருந்த மீன்களை விற்க விடாமல் இடையூறுகளை ஏற்படுத்தியதுடன், மீன்களையும் சேதப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து குறித்த பெண், முந்தல் பொலிஸில் இது தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த சம்பவத்தினால் தனக்கு 5ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக, அப் பெண் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
பெண் செய்த முறைப்பாட்டையடுத்து, சந்தேகநபர் முந்தல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago