2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மனைவிக்கு தீ வைத்த கணவன் தலைமறைவு

Gavitha   / 2017 மே 07 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

புத்தளம் நள்ளாந்தளுவ பிரதேசத்தில், தனது மனைவியை தீ மூட்டிக் கொலை செய்ய முற்பட்ட சந்தேக நபரான, கணவன், தலைமறைவாகியுள்ளதாக தெரிவித்த பொலிஸார், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக, இன்று (07) தெரிவித்தனர்.

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நள்ளாந்தளுவ பிரதேசத்தில், இளம் தம்பதிகளுக்கிடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த வௌ்ளிக்கிழமை (05), மனைவியை தீ மூட்டிக் கொலை செய்வதற்கு கணவர் முயற்சித்துள்ளார்.

கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளான 19 வயது மனைவி, புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற போதிலும் அவருடைய நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கணவர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எரிகாயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த  பெண்ணுக்கு, இரண்டு வயது குழந்தையொன்று இருப்பதாக தெரிவிக்கப்படுன்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X