2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

மரக்குற்றிகளுடன் இருவர் கைது

Princiya Dixci   / 2017 ஜனவரி 01 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஹம்மது முஸப்பிர்

நவகத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெத்தேவப் பிரதேசத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் டிரக்டர் ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த மரக்குற்றிகளுடன் அதே பகுதியைச் சேர்ந்த இருவரை, சனிக்கிழமை (31) இரவு கைதுசெய்துள்ளதாக, நவகத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் சில காலமாக இரவு வேளையில் இவ்வாறு மரக்குற்றிகளை சட்டவிரோதமான முறையில் ஏற்றிச் சென்றிருப்பது மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள், மிகவும் தந்திரமான முறையில் சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான துண்டாக்கப்பட்ட தேக்கு மற்றும் வேம்பு மரக் குற்றிகளை டிரக்டர் ஒன்றில் ஏற்றிச் சென்று கொண்டிருந்த போதே அவர்கள் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் நவகத்தேகமப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நவீன் இந்திரஜித் தயானந்தவின் உத்தரவில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .