Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஒக்டோபர் 18 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
புத்தளத்திலுள்ள விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான வருடாந்த கலைவிழா இன்று செவ்வாய்க்கிழமை (18), புத்தளம் நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
புத்தளத்தில் இயங்கிவரும் விஷேட தேவையுள்ள குழந்தைகளின் புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி மையம், புத்தளம் பிரதேச செயலகம், நகரசபை மற்றும் புத்தளம் பிரதேசத்திக்குட்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றிணைவுடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
'எனக்கு ஆட ஆசை' எனும் கருப்பொருளில் இடம்பெற்ற இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி, புத்தளம் பிரதேச செயலக உதவி பிரதேசசெயலாளர் சம்பத் வீரசிங்க, முன்னாள் யாழ். நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.ஐ.இலியாஸ், புத்தளம் நகரசபை நிர்வாக உத்தியோகத்தர் முஹம்மது சபீக், புத்தளம் பெரிய பள்ளிவாசல் தலைவர் பீ.எம்.ஜனாப் உள்ளிட்ட மதத்தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற அமைப்புகளின் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது விஷேட தேவையுடைய குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், அவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
14 minute ago
23 minute ago
34 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
23 minute ago
34 minute ago
47 minute ago