Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Princiya Dixci / 2017 மார்ச் 09 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் சமூக சேவைகள் பிரிவினால் திரிய லியட செவனக் திட்டத்தின் கீழ், முந்தல் பிரதேச செயலகத்துக்குட்பட்ட புளிச்சாக்குளம் வளங்கம்மான மற்றும் பெருக்குவற்றான் ஆகிய கிராமங்களில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் இரண்டு, பயனாளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்வு வைபவரீதியாக நேற்று (08) புதன்கிழமை நடைபெற்றது.
முந்தல் திவிநெகும மஹா சங்க முகாமையாளர் எச்.எம்.பி.ரேணுகாவின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், முந்தல் உதவி பிரதேச செயலாளர் திருமதி எச்.எம்.எம்.மஞ்சலி ஹேரத், முந்தல் பிரதேச அபிவிருத்தி இணைத் தலைவர்களான விக்டர் அன்டனி, எம்.என்.எம்.நஸ்மி, முந்தல் திவிநெகும தலைமையக முகாமையாளர் என்.என்.டிஸ்னி, மங்கள எளிய திவிநெகும வங்கி முகாமையாளர் திருமதி எஸ்.ஏ.ஜே.எஸ்.பெரேரா உட்பட கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் அனுஷ்டிக்கப்பட்ட சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள சமூக சேவைகள் பிரிவினால் திரிய லியட செவனக் திட்டத்தின் கீழ் குறித்த இரு வீடுகளும் தலா 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டு நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட குறித்த இரு வீடுகளும் நேற்று 8ஆம் திகதி சர்வதேச மகளிர் தினத்தன்று பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
43 minute ago
44 minute ago
46 minute ago