Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Thipaan / 2017 ஏப்ரல் 21 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
முஹம்மது முஸப்பிர்
முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மங்களவெளி பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் காயமடைந்து, முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று, முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரத்தில் இருந்து புத்தளம் ஊடாக கொழும்பு நோக்கிச் சென்ற கார், மங்களவெளி பிரதேசத்தில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரத்துடன் மோதி, எதிர்ப் பக்கத்திலுள்ள வீட்டின் மதலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்று (20) பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில், காரில் பயணித்த தந்தை, தாய், மகள் மற்றும் மகன் ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
14 minute ago
16 minute ago
19 minute ago