Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Kogilavani / 2017 மே 05 , மு.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
மாதம்பை குளியாப்பிட்டிய பிராதான வீதி, கல்முருவ பிரதேசத்திலுள்ள பாடசாலைக்கு அருகில், புதன்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, மாதம்பை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் வசந்த குமார தெரிவித்தார்.
இந்த விபத்துச் சம்பவத்தில், துனக்கதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த சம்பத் சிசிர குமார (வயது 35) என்பவரே, உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர், குளியாப்பிட்டியிலிருந்து மாதம்பை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, அதேத் திசையில் பயணித்துக் கொண்டிருந்த உழவு இயந்திரத்தை முந்திச் செல்ல முற்பட்டுள்ளார்.
இதன்போது எதிரே வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்து உழவு இயந்திரத்தை முந்திச் செல்ல முற்பட்டவர் கடுமையான காயங்களுக்குள்ளான நிலையில் கல்முருவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, எதிர்த் திசையிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளின் சாரதி காயங்களுக்குள்ளான நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
42 minute ago
43 minute ago
45 minute ago