Kogilavani / 2017 ஜனவரி 08 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
முஹம்மது முஸப்பிர்
சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிலாபம்-குருநாகல் வீதியின் கரவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில், ஒருவர் உயிரிந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில், முங்கந்தழுவை இலிப்பதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த கசுன் சமரகொடி (வயது 19) என்ற இளைஞனே, உயிரிழந்துள்ளார்.
குருநாகலை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த மோட்டார் சைக்களில், அங்கிருந்த உள்வீதியொன்றுக்குள் செல்வதற்கு முயன்றபோது, அதற்கு எதிர்த்திசையில் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது, சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவரே தற்போது உயிரிழந்துள்ளதாகவும் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025