2025 மே 05, திங்கட்கிழமை

விபத்தில் தம்பதியினர் காயம்

Princiya Dixci   / 2016 நவம்பர் 24 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

- முஹம்மது முஸப்பிர்

கல்பிட்டி - பாலாவி வீதியின் கரம்பைப் பிரதேசத்தில் நேற்றுப் புதன்கிழமை (23) இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நுரைச்சோலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளத்திலிருந்து கல்பிட்டி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த லொறியொன்றின் பின்புறமாக மோட்டார் சைக்கிள் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியே காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

கொய்யாவாடி பிரதேசத்தைச் சேர்ந்த 58 மற்றும் 55 வயதுடைய தம்பதியினர், மன்னாரில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த போதே, இவ்வாறு இவ்விபத்துக்கு முகங்கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோர் விபத்தினையடுத்து, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X