Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
George / 2017 ஜூன் 13 , பி.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஹிரான் பிரியங்கர ஜயசிங்க
ஆனைமடு, பரமாகந்த முச்சந்தியில் நேற்று மாலை, மோட்டார் சைக்கிள் - பஸ் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை சிப்பாய் உயிரிழந்துள்ளதாக ஆனைமடு பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்த, ஆனைமடு பிரதேசத்தில் வசிக்கும் சிந்தக சம்பத் வீரக்கொடி (வயது 29) என்ற திருமணமான இளைஞனே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் திருமண பந்தத்தில் இணைந்துக்கொண்ட இவர், விடுமுறையில் வீட்டுக்கு வந்து திரும்பிச் சென்ற போது, இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சிப்பாய் பயணித்த மோட்டார் சைக்கிள், புத்தளத்திலருந்து குருநாகல் நோக்கிப் பயணித்த பஸ்ஸுடன் மோதியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த சிப்பாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago