2025 மே 05, திங்கட்கிழமை

விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு

George   / 2017 ஜூன் 13 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

முத்தெட்டுகல - ஹிரிபிட்டிய வீதியின் வெல்லாவ, வல்பாலுவ பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் நபரொருவர், இன்று  உயிரிழந்துள்ளார்.

முச்சக்கரவண்டி மற்றும் கெப் வாகனம் என்பன ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி மற்றும்  பின்புறத்தில் பயணித்த நபர்  ஆகியோர் ஹிரிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதன்பின்னர், மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், சாரதி உயிரிழந்துள்ளார்.

மகுல்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதுடன், கெப் வாகனத்தின் சாரதியை கைதுசெய்த வெல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X