Editorial / 2020 ஓகஸ்ட் 11 , பி.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நஷனல் ஸ்ரீ லங்கா, இலங்கையின் கூட்டாண்மை அறிக்கையிடலில் முன்னெடுத்திருந்த முதலாவது மதிப்பீட்டின் போது, இலங்கையின் முதல் தர வங்கிசாரா நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமான, பீப்பள்ஸ் லீசிங் மூன்றாமிடத்தையும் வங்கிசாரா நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் வரிசையில் முதலாமிடத்தையும் பெற்றுள்ளது. கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் சந்தை மூலதனவாக்கத்தின் பிரகாரம் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் சிறந்த 50 நிறுவனங்களைத் தெரிவு செய்து, அவற்றின் மீது இந்த மதிப்பீடு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
‘கூட்டாண்மை அறிக்கையிடலில் வெளிப்படைத்தன்மை’ (TRAC) என, இந்த அறிக்கைக்குப் பெயரிடப்பட்டிருந்தது.
இலங்கையின் சிறந்த 50 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை மோசடி தவிர்ப்பு நிகழ்வுகள், நிறுவன இருப்புகளின் வெளிப்படைத்தன்மை, பிரதான நிதித் தகவல்களை வெளிப்படுத்தல் போன்ற மூன்று தொனிபொருள்களில் மதிப்பீட்டுக்கு உட்படுத்துவது, ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நஷனல் ஸ்ரீ லங்காவால் வெளியிடப்பட்டிருந்த இந்த அறிக்கையின் நோக்கமாக அமைந்திருந்தது. பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் வருடாந்த நிதி அறிக்கைகளிலிருந்து தகவல்களைத் திரட்டி, இந்த மதிப்பாய்வு முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
8 minute ago
12 minute ago
38 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
12 minute ago
38 minute ago
3 hours ago