Editorial / 2018 ஒக்டோபர் 29 , பி.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
22.10.2018
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ் மற்றும் டயலொக் அக்ஸியாடா ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 214 மில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு மெல்ஸ்டாகோர்ப், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் எல் பீ ஃபினான்ஸ் ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.
23.10.2018
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனி மற்றும் சம்பத் வங்கி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 200 மில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் கஹாவத்த பிளான்டேஷன்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் அதிகளவு ஈடுபட்டனர்.
24.10.2018
வப் போயா விடுமுறை காரணமாக கொழும்பு பங்குப்பரிவர்த்தனை கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறவில்லை.
25.10.2018
காகில்ஸ், ஹற்றன் நஷனல் வங்கி மற்றும் கொமர்ஷல் வங்கி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைப் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 1.2 பில்லியனாக பதிவாகியிருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகளின் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் பெருமளவு ஈடுபட்டனர்.
26.10.2018
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சம்பத் வங்கி மற்றும் கொமர்ஷல் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 1.4 பில்லியனாக பதிவாகியிருந்தது. கொமர்ஷல் வங்கி, நெஸ்லே லங்கா, ஹற்றன் நஷனல் வங்கி, லயன் பிரெவரி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் தேசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் அதிகளவில் ஈடுபட்டனர்.
வாரத்தில் அ.ப.வி.சு 1.14% உயர்வையும் S&P SL20 2.62% உயர்வையும் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரி புரள்வு 786 மில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது.
14 minute ago
22 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
22 minute ago
1 hours ago
1 hours ago