Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஒக்டோபர் 13 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கூட்டாண்மைச் சிறப்பு மற்றும் இயக்கத்தன்மைக்கு தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி செயலாற்றி வரும் 99X Technology, இலங்கையின் சிறந்த 100 நன்மதிப்பைப் பெற்ற நிறுவனங்களில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டுள்ளது. நீல்சன் நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட LMDஇன் 2015 ஆம் ஆண்டுக்கான வருடாந்த தரப்படுத்தலில் இந்த தரப்படுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்த பெருமைக்குரிய தரப்படுத்தலில் முதல் தடவையாக தெரிவாகியிருந்த 99X Technology, தொழில்நுட்ப துறையில் முதலாமிடத்திலும் தெரிவாகியிருந்தது. ஒலிம்பிக் தரப்படுத்தல் முறைக்கமைய இந்த தெரிவுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த தரப்படுத்தல் தொடர்பில் 99X Technologyஇன் இணை ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மனோ சேகரம் கருத்து தெரிவிக்கையில், 'இலங்கையின் தலைசிறந்த நிறுவனங்கள் வரிசையில் தெரிவாகியுள்ளமை என்பது உண்மையில் எமக்கு மிகவும் பெருமையான விடயமாக அமைந்துள்ளது. எமது நிறுவனம் ஊழியர்களை மையமாகக் கொண்ட ஒரு நிறுவனமாகும். எமது நிறுவனத்தை மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் வகையில் அரப்பணிப்புடன் செயலாற்றும் எமது ஊழியர்களின் முயற்சிகளுக்கு கிடைத்த ஒரு சான்றாக அமைந்துள்ளது. அத்துடன், தகவல் தொழில்நுட்பத்துறையில் இந்த நிறுவனம் முதலிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளமை என்பதும் மிகவும் பெருமைக்குரிய விடயமாக அமைந்துள்ளது' என்றார்.
11ஆவது தடவையாக முன்னெடுக்கப்பட்ட இலங்கையின் நன்மதிப்பை வென்ற நிறுவனங்களை தரப்படுத்தும் செயற்பாடுகள், கூட்டாண்மை நிறுவனங்களின் நன்மதிப்பை மேலும் உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. நிதிப் பெறுபேறுகள், தர விழிப்புணர்வு நிலை, முகாமைத்துவ கோவை, நேர்மை, புத்தாக்கம், இயக்கநிலை, கூட்டாண்மை கலாசாரம், சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகள், நோக்கம் மற்றும் தேசப்பற்று ஆகிய விடயங்களை கவனத்தில் கொண்டு கருத்துக்கணிப்புகளின் பெறுபேறுகளுக்கமைய இந்த நிறுவனங்கள் தரப்படுத்தப்பட்டிருந்தன. இதில் 800 பங்குபற்றுநர்கள் கருத்துக்கணிப்புக்குட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர்கள் கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் முகாமையாளர்கள் மற்றும் உயர்ந்த நிலைகளில் பணியாற்றுபவர்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
99X Technology என்பது மென்பொருள் வடிவமைப்பு நிறுவனமாகும். உலகளாவிய ரீதியில், குறிப்பாக ஐரோப்பாவில் காணப்படும் சுயாதீன மென்பொருள் சேவை வழங்குநர்களுக்கு (ISVs) அவசியமான மென்பொருள் தீர்வுகளை வழங்கும் நிறுவனமாக இயங்கி வருகிறது. இலங்கையில் தலைமையகத்தை கொண்டுள்ளதுடன், நோர்வே நாட்டின், ஒஸ்லோ நகரை மையமாக கொண்டு இயங்கும் இந்நிறுவனம், இதுவரையில் 150க்கும் மேற்பட்ட மென்பொருள் தீர்வுகளை வெற்றிகரமாக வடிவமைத்து வழங்கியுள்ளது. இந்நிறுவனம் ஆசியாவில் பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக 2015 இல் தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன், இலங்கையில் பணிபுரிவதற்கு சிறந்த 20 நிறுவனங்களில் ஒன்றாகவும் Great Place To Work Institute இனால் தொடர்ச்சியான மூன்று ஆண்டுகளாக தெரிவு செய்யப்பட்டிருந்தது.
1 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago