Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 டிசெம்பர் 24 , மு.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னணி வாகன விற்பனை மற்றும் டயர்கள் உற்பத்தியில் ஈடுபடும் அசோசியேட்டட் மோட்டர்வேய்ஸ் (AMW) நிறுவனத்தின் 2014இன் சிறந்த 100 பிராந்திய விநியோகஸ்த்தர்களுக்கான மாநாட்டை, பிடகோட்டே பகுதியில் அமைந்துள்ள சொலிஸ் ஹோட்டலில் அண்மையில் முன்னெடுத்திருந்தது. குறிப்பாக மேல் மாகாணத்தைச் சேர்ந்த AMWவின் டயர் விநியோகஸ்த்தர்களை கௌரவிக்கும் வகையில் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வில் AMW உற்பத்தி பணிப்பாளர் புஷ்பிக ஜனதீர பங்கேற்றிருந்ததுடன், AMW வின் ரிடிரெடிங் விநியோகஸ்த்தர்கள் பலரும் களுத்துறையில் அமைந்துள்ள AMW வின் மாபெரும் உற்பத்தி தொழிற்சாலையின் சேவைகளையும் பொருட்களையும் பெற்றுக் கொள்ளும் பிரதான வாடிக்கையாளர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
மேல் மாகாணத்தின் சிறந்த டயர் விநியோகஸ்த்தருக்கான விருது, அதிகளவு டயர்கள் வர்த்தக நாமங்கள் விற்பனை செய்தவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. இதில் Marathon DAG, Marathon Radial, Marathon High-Miler, OTR மற்றும் aDAG என்பன இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டிருந்தன. களனி பிரதேசத்தைச் சேர்ந்த குசும் டயர் டிரேடர்ஸ் சிறந்த பிராந்திய விற்பனை விநியோகஸ்த்தராக தெரிவாகியிருந்தது. இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்கள் முறையே, ஜா-எல நிமல் டயர் வேர்க்ஸ் மற்றும் கலகெடிஹேன, ஆனந்தா டயர் சென்டர் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டிருந்தன. சிறந்த 100 விநியோகஸ்த்தர்களாக தெரிவாகியிருந்த சகலருக்கும் AMW வின் வியாபாரச் சிறப்பு விருதுகள் மற்றும் பெறுமதி வாய்ந்த பரிசுகள் போன்றன வழங்கப்பட்டிருந்தன.
AMW வின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் சிரேஷ்ட முகாமையாளர் நிமல் எஸ் ரத்நாயக்க மேல் மாகாண சிறந்த 100 விநியோகஸ்த்தர்கள் மாநாடு 2014இல் உரையாற்றும் போது, டயர் ரிடிரெடிங் விநியோகஸ்த்தர்களின் அபிவிருத்தி என்பது, AMW வின் அபிவிருத்தியில் நேரடியான தொடர்பை கொண்டுள்ளது என்றார்.
'2014 இல் AMW க்கு வழங்கிய மதிப்பு மற்றும் பங்களிப்புக்காக அதிகளவு நன்மதிப்புடன் நாம் உங்களை வரவேற்கிறோம். வருடாவருடம் AMW தனது விற்பனை சாதனைகளை மேம்படுத்திய வண்ணமுள்ளது. டயர் விநியோகஸ்த்தர்களுக்கான அனுகூலங்களை நாம் அதிகரிக்கும் அதேவேளை, எமது தயாரிப்புகளின் பன்முகப்படுத்தல் மற்றும் சேவைகளை விஸ்தரித்தல் போன்ற செயற்பாடுகளையும் நாம் முன்னெடுத்த வண்ணமுள்ளோம். AMW precured டயர்கள் என்பது சந்தையில் விற்பனையாகும் சிறந்த AMW precured டயர்களாக காணப்படுகின்றன. எமது பாரம்பரிய டயர்கள் / off the road டயர்களுக்கான கேள்வியும் அதிகரித்துள்ளது. இதன் மூலம் இலங்கையில் காணப்படும் சிறந்தprecured டயர் வர்த்தக நாமமாக நாம் திகழும் வகையில், நாடு முழுவதிலும் வெவ்வேறு புத்தாக்கமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் AMW அண்மையில் ஆரம்பித்திருந்தது. எமது தெரிவுகளை நாம் மேம்படுத்தியுள்ளோம். அண்மையில் மரதன் ரேடியல் டயர் உயர்ந்த பயணத்தூரத்தை போட்டிகரமான விலையில் வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இலகு மற்றும் பார ட்ரக் வகைகளுக்கு மிகவும் பொருத்தமானதாக அமைந்துள்ளது' என்றார்.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட AMW வின் உற்பத்தி பிரிவின் பணிப்பாளர் புஷ்பிக ஜனதீர, கருத்து தெரிவிக்கையில், 'தனது precured டயர்கள் உற்பத்தி செயற்பாட்டின் போது உயர் தராதரங்களை AMW பின்பற்றி வருகிறது. எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தயாரிப்புகளை வழங்குவது எமது நோக்காகும். இலங்கையில் காணப்படும் டயர் உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்த்தர்கள் AMW வின் நியமங்களை பின்பற்றி வருகின்றன.
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் புதிய டயர் ரிடிரெடிங் உற்பத்தி தொழிற்சாலைகளை நிறுவும் செயற்பாட்டை, நாம் அண்மையில் ஆரம்பித்திருந்தோம். சந்தையில் உயர்ந்த தயாரிப்புகளாக தனது precured டயர் வர்த்தக நாமங்களை பேண AMW தன்னை அர்ப்பணித்துள்ளது. ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு தமது டயர் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு திறன் விருத்தி செயற்பாடுகளையும் யுஆறு மேற்கொண்டிருந்தது. சகல சிறந்த விநியோகஸ்த்தர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
AMW இலங்கையில் 1949ஆம் ஆண்டு முன்னணி டயர் ரிடிரெடிங் உற்பத்தியாளராக ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. உற்பத்தி மற்றும் சேவை தொடர்பில் கம்பனி அதிகளவு கவனம் செலுத்தி வருகிறது. AMW உள்நாட்டில் brands, Nissan, Suzuki, Suzuki Maruti, Yamaha, Piagio, New Holland மற்றும் Dong Feng மற்றும் உதிரிப்பாகங்கள் மற்றும் சேவைகள் போன்றவற்றை இந்த வர்த்தக நாமங்களுக்கு வழங்கி வருகிறது. மேலும், BP, Castrol, Epic truck tyres மற்றும் பற்றரிகள் ஆகியவற்றை இறக்குமதி செய்து விநியோகிக்கும் செயற்பாடுகளையும் AMW முன்னெடுத்து வருகிறது. கெப்பிட்டல் லீசிங் கம்பனியின் பெருமைக்குரிய உரிமையாளராகவும் AMW திகழ்கிறது. AMW வின் வியாபாரத்தில் டயர் ரிடிரெடிங் பிரிவு என்பது முக்கிய இடத்தை வகிக்கின்றது.
களுத்துறை மற்றும் அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களில் இரு மாபெரும் தொழிற்சாலைகளை AMW கொண்டுள்ளது. AMW இன் சகல உற்பத்திகளுக்கும் ISO சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இவை ISO 9001-2008 தரச்சான்றிதழையும், சூழல் பாதுகாப்புக்கான ISO 14001-2004 தரச்சான்றையும் பெற்றுள்ளது.
2 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago