Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 ஏப்ரல் 11 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தப் புத்தாண்டு காலத்தில் காப்புறுதி செய்யப்பட்ட அன்புக்குரியவர்களை பாதுகாத்திட உதவ யூனியன் அஷ்யூரன்ஸ் முன்வந்துள்ளது. 1987 முதல், காப்புறுதித்துறையில் இயங்கி வரும் இந்நிறுவனம், இலங்கையின் பல தலைமுறைகளின் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்துள்ளது. 30 வருட காலமாக யூனியன் அஷ்யூரன்ஸ் காப்புறுதி மற்றும் முதலீட்டுத் தீர்வுகளை வழங்குவதுடன், நம்பிக்கையுடனான பாதுகாப்புக்கான தனது அர்ப்பணிப்பான பயணத்தைத் தொடர்ந்த வண்ணமுள்ளது.
நம்பிக்கை என்பதற்கான தனது அர்ப்பணிப்புக்கமைய, பங்காளர்கள் மற்றும் பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது முதல் வென்றுள்ளது. இலங்கையில் காப்புறுதியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் தனது சேவைகள் மற்றும் தீர்வுகளைத் தொடர்ச்சியாக மேம்படுத்தியுள்ளது. இலங்கையின் காப்புறுதி மற்றும் முதலீட்டுத் துறையில் யூனியன் அஷ்யூரன்ஸ் எவ்வாறு முன்னோடியாக தெரிவாகியிருந்தது என்பது இதனூடாக உறுதியாகிறது.
யூனியன் அஷ்யூரன்ஸ் விற்பனை மற்றும் விநியோக செயற்பாடுகளின் பொது முகாமையாளர் தர்ஷன அமரசிங்க கருத்துத் தெரிவிக்கையில், முப்பது வருடங்கள் என்பது குறுகிய காலம் அல்ல. பல தடைகளை நாம் கடந்து வந்துள்ளதுடன், இலங்கையின் காப்புறுதிச் சந்தையில் பல வெற்றிகளையும் எய்தியுள்ளோம். எமது வெற்றியின் பிரதான அம்சமாக, எமது நாட்டுக்கும், சமூகங்களுக்கும் எமது வாழ்க்கைத்தரங்களுக்கும் பொருத்தமான பல தீர்வுகளை வடிவமைத்திருந்தமை அமைந்துள்ளது.
2 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago