Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 07 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில் இயங்கும் சமையலறை மற்றும் படுக்கையறை உள்ளக அலங்கார வடிவமைப்பு கலையகமான Kitchen & Bedroom, தனது இரண்டு வருட பூர்த்தியை கொண்டாடியது. 1000க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு தனது சேவைகளை வழங்கியுள்ளதுடன், எதிர்காலத்தில் தமது செயற்பாடுகளை விரிவாக்கம் செய்யும் திட்டத்தையும் கொண்டுள்ளது.
வாடிக்கையாளர்களுடன் நேரடியாக இணைந்து செயலாற்றும் சமையலறை நிபுணர்களைக் கொண்ட Kitchen & Bedroom, உற்பத்தி செலவுகளை குறைத்து, சிறந்த பெறுபேறுகளை வடிவமைப்பில் வழங்குவதை மேற்கொள்கின்றது. உயர் தரம் வாய்ந்த சேவைகளில் விற்பனைக்கு பிந்திய சேவை மற்றும் 21 நாட்களினுள் திட்டங்களை பூர்த்தி செய்து வழங்கும் உறுதி மொழி போன்றன வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இன்றைய இளம் தலைமுறையினரிடையே வீட்டை அலங்கரித்து நவீன தோற்றத்தில் திகழச் செய்வதில் அதிகளவு அக்கறை காண்பிக்கப்படுகின்றது. Kitchen & Bedroom ஐச் சேர்ந்த உள்ளக வடிவமைப்பாளர்கள் இலவசமாக வாடிக்கையாளர் பகுதிகளுக்கு விஜயம் செய்து, ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களை வழங்குவதுடன், 2D மற்றும் 3D அலங்கார ஆலோசனைகளும் அடங்கியுள்ளன. ஐரோப்பிய நியமங்கள் மற்றும் வடிவமைப்புகளுக்கமைய சமையலறையில் கபினட்களை நிறுவும் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்.
இதன் ஒரு வர்த்தக நாமமான ‘Blueberry kitchen’ என்பது 5 வலய கொள்கையாகும். பான்ரி, சிங்க், தயாரிப்பு பகுதி, களஞ்சிய பகுதி மற்றும் சமையல் போன்ற பகுதிகளை வினைத்திறன் வாய்ந்த வகையில் வடிவமைக்கின்றது. பாரம்பரிய தோற்றங்களிலிருந்து, நவீன தோற்ற அம்சங்களுக்கு புதிய உள்ளம்சங்களுடன் சமையலறைகள் மேம்பட்டுள்ளன.
துருக்கியிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பலகை கொண்டு Kitchen & Bedroom இனால் உற்பத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவை உயர் தரம் வாய்ந்தவை என்பதுடன், மென்மையான தொடுகையையும் கொண்டுள்ளன. 200க்கும் அதிகமான வர்ணங்களிலிருந்து தெரிவு செய்து கொள்ளலாம். சமையலறை சாதனங்கள் ஜேர்மனியிலிருந்து தருவிக்கப்படுகின்றன. இவை உயர் தரம் வாய்ந்தவை என்பதுடன், 10 வருட உத்தரவாதத்தையும் கொண்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
2 hours ago
5 hours ago