Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 18 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொபிடெல், Over the Top Applications (OTP) எனப்படும் WhatsApp, Viber போன்ற பல தெரிவுகளைக் கொண்ட அப்ளிகேஷன்கள் மூலம் வாடிக்கையாளர் சேவைகளை வழங்குவதில் இரண்டாவது வெற்றிகரமான ஆண்டைப் பூர்த்தி செய்துள்ளது.
தங்களது வாடிக்கையாளர்களின் மாறி வரும் தேவைகள், தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்பவற்றைப் புரிந்து கொண்டு, மொபிடெல் WhatsApp, Viber மூலமான டிஜிட்டல் தலைமையிலான வாடிக்கையாளர் சேவையை 2018ஆம் ஆண்டில் இலங்கையில் முதல் தடவையாக அறிமுகப்படுத்தியது. OTT தளங்கள் வழியாக வாடிக்கையாளர் தொடுபுள்ளிகளை வழங்கிடும் மொபிடெலின் முன்னோடியான இந்த நடவடிக்கையின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தொடர்பில் இருந்திடவும், தங்கள் விசாரணைகளுக்கு உதவிகளைப் பெற்றுக் கொள்ளவும், தங்கள் பிரச்சினைகளை சிக்கலற்ற விதத்தில் தீர்த்துக் கொள்ளவும் வழிவகுத்தது.
மேலும் மொபிடெல் Chatbot, Self-Care App, DataMart App, Web Chat, பாரம்பரிய hotlines, frontline support க்கு மேலதிகமாக E-mail, fax போன்ற ஏனைய டிஜிட்டல் வாடிக்கையாளர் தொடுபுள்ளிகளையும் வழங்குகிறது. தங்களால் இயலுமான அனைத்து விதமான தொடுபுள்ளிகளையும் தங்கள் வாடிக்கையாளர் தளத்துக்கு வழங்குவதன் மூலம் மொபிடெல் ஆனது தமது வர்த்தகக் குறியின் வரியினையும் அன்பு, வினைத்திறன் மிகுந்த வாடிக்கையாளர் சேவை தர நிர்ணயங்களையும் தமது வாடிக்கையாளர்களுக்கு பழக்கப்படுத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago