2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

கட்டட நிர்மாண துறையில் தொழிலாளர் பற்றாக்குறை

A.P.Mathan   / 2013 ஜனவரி 15 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கப்பூர் தனது கட்டட நிர்மாண துறையில் பணியாற்றுவதற்கென சுமார் 30,000 இலங்கையர்களையும், பிலிப்பைன்ஸ் நாட்டைச்சேர்ந்தவர்களையும் உள்வாங்க தீர்மானித்துள்ள நிலையில், இலங்கையில் கட்டட நிர்மாணத்துறையில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளதாக துறைசார் நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இலங்கையை பொறுத்தமட்டில் கடந்த சில ஆண்டுகளாக கட்டட நிர்மாணத்துறை துரிதமாக வளர்ச்சியடைந்து வருகிறது. நாட்டில் நிலவிய யுத்த நிலை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, வடக்கு - கிழக்கு பிராந்தியங்கள் உள்ளடங்கலாக அனைத்து பகுதிகளிலும், நிர்மாணத்துறைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த துறையில் பணியாற்றுவதற்கு போதியளவு தொழிலாளர்களும், நிபுணத்துவம் வாய்ந்தவர்களும் குறைவாகவே காணப்படுவதாக கியு சேர்வ் பிரைவேற் லிமிடெட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பேராசிரியர் சித்ரா வெடிக்கார கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சர்வதேச நாடுகள் இலங்கையிலிருந்து நிர்மாணத்துறை சார்ந்த தொழிலாளர்களை உள்வாங்க முன்வருகின்றமை நாட்டின் நிர்மாணத்துறைக்கு பெரும் சவாலாக அமைவதுடன், உள்நாட்டு தொழிலாளர்களை ஈர்க்கும் வகையில், நிர்மாணத்துறையில் ஈடுபடும் நிறுவனங்கள் சலுகைகளையும், ஊக்குவிப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளதெனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .