2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

ஆர்பிகோவின் முழுமையான நீர்தீர்வு வழங்கல்

A.P.Mathan   / 2013 ஜனவரி 16 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


றிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி (ஆர்பிகோ) மூலம் ஆனமடுவ வெலேவௌ சுமேத வித்தியாலயத்துக்கு முழுமையான நீர் தீர்வை வழங்கியுள்ளது. சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு 'விவசாயத்தில் நவீன தொழில்நுட்பத்தின் பயன்பாடு' எனும் தொனிப்பொருளுக்கு அமைவாக ஐக்கிய நாடுகள் தகவல் நிலையத்தின் மூலம் இந்த பாடசாலையில் மாதிரி விவசாய பண்ணை ஒன்றை ஒன்று நிறுவப்பட்டிருந்தது. இதன் மூலம் பாடசாலை மாணவர்களுக்கு விவசாயத்துறையில் தமது அறிவை விருத்திசெய்து கொள்வதற்கான வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி விவசாய பண்ணைக்குரிய முழுமையான நீர் தீர்வுகளை ஆர்பிகோ வழங்கியிருந்தது. இதற்கமைய, ஆர்பிகோ நீர் தாங்கி, ஆர்பிடெக் நீர் பம்பி மற்றும் ஆர்பிகோ பிவிசி குழாய்க்ள் மற்றும் உதிரிப்பாகங்கள் போன்றவற்றின் மூலம் இந்த தீர்வு வழங்கப்பட்டிருந்தது. நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகளில் ஓரங்கமாக இது இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து றிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சி நிறுவனத்தின் வர்த்தக அபிவிருத்தி முகாமையாளர் டில்ஷான் அபேசேகர கருத்து தெரிவிக்கையில், 'இலங்கையில் நீர் தீர்வுகளை வழங்குவதில் முன்னணியில் திகழும் ஆர்பிகோ நிறுவனம், நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதில் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது. இதன் அடிப்படையில் பொது இடங்களில் சுத்தமான நீரை கிடைக்கச்செய்வதன் முக்கியத்துவம் குறித்து நாம் அதிகம் அக்கறை செலுத்தி வருகிறோம். எமது நிறுவனத்தின் மூலம் அண்மையில் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆய்வொன்றில், பெரும்பாலான பின்தங்கிய பிரதேசங்களை சேர்ந்த பாடசாலைகள் தூய்மையான நீரை பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வந்தமையை கண்டறிய முடிந்தது. இதன் காரணமாக ஐக்கிய நாடுகள் தகவல் நிலையத்துடன் கைகோர்த்து இந்த பாடசாலைக்கு உதவ தீர்மானித்தோம். எதிர்காலத்திலும் இதுபோன்ற திட்டங்களை முன்னெடுக்க நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம்' என்றார்.

20 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் பிளாஸ்ரிக் நீர் தாங்கிகள் அறிமுகப்படுத்தியிருந்த றிச்சர்ட் பீரிஸ் குழுமத்தின் செயற்பாட்டு திறனை கௌரவிக்கும் வகையில் ISO 9001:2008 தரச்சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. ஆர்பிகோ நீர் தாங்கிகளில், ட்ரிபல் லேயர் தாங்கி, சம்ப் தாங்கி, அக்குவா டஃவ் நீர் தாங்கி, குப்பை தாங்கிகள், செப்டிக் தாங்கி மற்றும் கொம்போஸ்ட் தாங்கி போன்ற பிளாஸ்ரிக் தாங்கிகள் பல உள்ளடங்கியுள்ளன. நவீன மற்றும் பூரண நீர் தீர்வுகளை வழங்கும் இந்நாட்டின் முன்னணி நிறுவனமாக ஆர்பிகோ, அனைத்து நீர் தொடர்பான தீர்வுகளுக்கும் பயன்படுத்தக்கூடிய ஆர்பிடெக் நீர் பம்பிகள், ஆர்பிகோ PVC நீர் கட்டமைப்புகள் மற்றும் இறப்பர் ஹோஸ் பம்பிகள், ஆர்பிகோ PVC நீர் குழாய்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் தயாரிக்கப்படுகின்றன. SLS தரச்சான்றிதழ் வழங்கப்பட்ட உலகின் நவீன தொழில்நுட்பத்துக்கு அமைவாக தயாரிக்கப்படும் PVC நீர் குழாய்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் அனைத்து நீர் கட்டமைப்புகளுக்கும் பொருந்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆர்பிடெக் பம்பிகளை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தமது ஆர்பிடெக் நீர்பம்பிகளில் மற்றும் நீர் கட்டமைப்புகளில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வுகளை வழங்கும் வகையில் 'Arpitec Doorstep service' எனும் சேவையை வழங்குகிறது. இலங்கையை சேர்ந்த நீர்பம்பி வகைகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் இது போன்ற சேவையை அறிமுகப்படுத்தியுள்ள முதலாவது நிறுவனமாக ஆர்பிகோ அமைந்துள்ளது.

80 வருடங்களுக்கு அதிகமான உயர் பாரம்பரிய வரலாற்றையும், 35000இற்கும் அதிகமான ஊழியர்களையும் கொண்டுள்ளதுடன், இலங்கையின் மிகப்பெரிய தேசிய குழும வியாபார நிறுவனமாக றிச்சர்ட் பீரிஸ் நிறுவனம், பல்வேறு துறைகளில் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அதிகளவு சந்தைவாய்ப்பை தன்னகத்தே கொண்ட பல்வேறு தயாரிப்புகளின் தாயகமாக திகழும் றிச்சர்ட் பீரிஸ் நிறுவனம், இந்நாட்டின் சுப்பர் மார்க்கெட்கள், பெருந்தோட்டத்துறை, பங்குச்சந்தை முகவர் சேவைகள், ரயர், பிளாஸ்ரிக் மற்றும் நிர்மாணத்துறை போன்ற துறைகளிலும் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தி வருகிறது. நகர் பகுதிகளை போலவே, கிராமிய மட்டத்திலும், பலராலும் நேசிக்கப்படும் நாமமாக றிச்சர்ட் பீரிஸ் நிறுவனம் திகழ்கிறது. பிரதானமாக ஆர்பிகோ வர்த்தக நாமத்தை விசேடமாக குறிப்பிட முடியும். நாடு பூராகவும் இந்த வர்த்தக நாமத்தை சேர்ந்த தயாரிப்புகள் கிடைக்கின்றமை விசேட அம்சமாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .