2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

ரெக்ஸ்சோனா மூலம் சிறந்த தனிநபர் சுகாதாரப் பழக்கவழக்கத்திற்கு வெகுமதிகள்

A.P.Mathan   / 2013 ஜனவரி 17 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலகின் முன்னணி டியோட்ரன்ட்ஸ் வகையான ரெக்ஸ்சோனா வர்த்தகநாமமானது, மக்களுக்கு வியர்வை மற்றும் உடல் நாற்றம் குறித்த விழிப்புணர்வுகளை வழங்கியதுடன், ஆண் பெண் இருபாலரிடையேயும் டியோட்ரன்ட் பாவனையை ஊக்குவிக்கும் வகையிலான திட்டங்களை முன்னெடுத்திருந்தன. இதன் ஓர் அங்கமாக, அண்மையில் முன்னெடுத்த 'ரெக்ஸ்சோனா கையடக்கத்தொலைபேசி' வாடிக்கையாளர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ்; தெரிவு செய்யப்பட்ட 60 வெற்றியாளர்களுக்கு அடுத்த ஒரு வருடத்திற்கான மாதந்தம் ஆயிரம் ரூபாய் ப்ரீபேய்ட் பெக்கேஜ் அடங்கிய புதிய Samsung Galaxy Y Color Plus கையடக்கத் தொலைபேசிகள் வழங்கப்பட்டன. நாடுபூராகவும் இடம்பெற்ற வாடிக்கையாளர் ஊக்குவிப்பு திட்டமானது 14,000 பேரை கவர்ந்திருந்தமை விசேட அம்சமாகும்.

'நான் கடந்த 4 வருடங்களாக நாளாந்தம் ரெக்ஸ்சோனா தயாரிப்பை பாவிக்கிறேன். இத்தயாரிப்பு எனது அக்குள் பிரதேசத்திற்கு புத்துணர்ச்சியை வழங்குவதுடன், வியர்வையையும் கட்டுப்படுத்துகிறது' என வெற்றியாளர்களில் ஒருவரான ராஜகிரியவைச் சேர்ந்த சன்துலா முனசிங்க தெரிவித்தார். மேலும் மற்றுமொரு வெற்றியாளரான மஹரகம பிரதேசத்தை சேர்ந்த எச்.ஈ.டி.சம்பத் தமது பரபரப்பான நாளாந்த வேலைகளை எதிர்கொள்வதற்கு தகுந்த தன்னம்பிக்கையை ரெக்ஸ்சோனா வழங்கியுள்ளது எனவும், கடந்த 3 வருடங்களாக இத்தயாரிப்பை பாவித்து வருவதாகவும் தெரிவித்தார்.

டியோவின் உதவி வர்த்தகநாம முகாமையாளரான விதுஷி ரம்புக்வெல்ல கருத்து தெரிவிக்கையில் 'இத்துறையை பொறுத்தவரை, வியர்வை மற்றும் உடல் நறுமணம் குறித்து குறைவான விழிப்புணர்வும், anti-perspirant டியோட்ரன்ட்ஸ் பாவிப்பதன்; அனுகூலங்கள்; குறித்தும் குறைந்தளவான விழிப்புணர்வு மக்கள் மத்தியில்; காணப்படுவது பெரும் சவாலாக உள்ளது என்றார். நாளாந்த தனிநபர் சுகாதாரத்தில் டியோட்ரன்ட்ஸ் பாவனை மிக முக்கிய பங்களிப்பினை செலுத்துகிறது என்பதை தெளிவுபடுத்துவதற்கான வாய்ப்பை இப்போட்டி மூலம் பெற்றுக் கொண்டுள்ளோம். மேலும் நாம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், வர்த்தகநாமத்தையும் பிரபல்யம் செய்கின்றோம்;' என்றார்.

இவ் ஊக்குவிப்பு திட்டத்தின் மூலம்; ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் டியோட்ரன்ட் பாவனையின் முக்கியத்துவம் குறித்து அறிந்து கொண்டதுடன்;, டியோட்ரன்ட்;ஸ் துறையில் இவ் வர்த்தகநாமத்தை முன்னணியில் திகழச் செய்யவும் முடிந்துள்ளது. இதைத்தவிர, ரெக்ஸ்சோனா வர்த்தகநாமமானது, உள்ளக பல்கலைக்கழக நிகழ்ச்சிகள் மற்றும் இளைஞர்கள் சம்பந்தமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு அனுசரணை வழங்கி வாடிக்கையாளர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. உலகின் முதற்தர டியோட்ரன்ட் வகையான ரெக்ஸ்சோனா வர்த்தக நாமமானது ஆண், பெண் இருபாலருக்கும் ஏற்றது என உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 35 நாடுகளுக்கும் மேலாக விற்பனை செய்யப்படுகிறது. ரெக்ஸ்சோனா டியோட்ரன்ட் தயாரிப்பானது அக்குள்களில் வியர்வை ஏற்படுவதை தடுப்பதுடன், உடல் நாற்றத்தையும் கட்டுப்படுத்துகிறது என பரிசோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .