2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

வட்டவல ப்ளான்டேஷன்ஸுக்குத் தொடர்ச்சியாக ஐந்தாவது தடவையாக தங்க விருது

A.P.Mathan   / 2013 ஜனவரி 18 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


சன்ஷைன் குழுமத்திற்கு சொந்தமான வட்டவல ப்ளான்டேஷன்ஸ் நிறுவனம் பெருந்தோட்டத்துறையில் சிறந்த வருடாந்த அறிக்கையை சமர்ப்பித்தமைக்காக தங்க விருதை வென்றெடுத்துள்ளது.

வட்டவல ப்ளான்டேஷன்ஸ் தொடர்ச்சியாக இவ்விருதை ஐந்தாவது தடவையாக வென்றெடுத்ததன் மூலம் நிறுவனத்தின் ஆளுமை வெளிப்பட்டுள்ளதுடன் நம்பகத்தன்மை, பொறுப்பு ஆகியவற்றைக் கருத்திற்கொண்டும் நிறுவனம் முன்வைத்த தகவல்களை அடிப்படையாக கொண்டுமே இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. 

கூட்டுறவு மற்றும் உள்ளக வர்த்தக அமைச்சின் செயலாளர் ஜி.கே.டி.அமரவர்தனவிடமிருந்து வட்டவல ப்ளான்டேஷன்ஸ் நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரி லலித் குரே விருதினை பெற்றுக்கொண்டார். மேலும் இலங்கைப் பட்டயக் கணக்கறிஞரும் கழகத்தின் தலைவருமான சுஜீவ ராஜபக்ஸ, விருது வழங்கும் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் திஷான் சுபசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர். 

பத்தரமுல்லையிலுள்ள வோட்டர்ஸ் எட்ஜில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் சன்ஷைன் குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் விஷ் கோவிந்தசாமியும் கலந்துகொண்டார்.

சன்ஷைன் குழுமத்திற்கு இதன்போது சான்றிதழ் ஒன்றும் வழங்கப்பட்டது. அதனை நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரி லலித் விதானகே இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் கழகத்தின் முன்னாள் தலைவரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .