2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

சிலோன் டுபாக்கோ நிறுவன தலைமைத்துவத்தில் மாற்றம்

Kogilavani   / 2013 மார்ச் 08 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலோன் டுபாக்கோ நிறுவனத்தின் தலைவராக பணியாற்றி வரும் ஜயம்பதி பண்டாரநாயக்க எதிர்வரும் நிறுவனத்தின் வருடாந்த ஒன்றுகூடலுடன் தனது பதவியிலிருந்து விலகிக் கொள்ள தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

சுமார் 45 வருட காலமாக சிலோன் டுபாக்கோ நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவத்தை கொண்டுள்ள இவர், எதிர்வரும் 28 ஆம் திகதியுடன் பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவரை தொடர்ந்து, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவராக செயலாற்றி வரும் சுசந்த ரத்நாயக்க சிலோன் டுபாக்கோ நிறுவனத்தின் தலைமைப் பதவியை பொறுப்பேற்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் தற்போது, சிலோன் டுபாக்கோ கம்பனியின் நிர்வாக சபையில் அங்கம் வகிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .