2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

தங்கத்தால் குழந்தைகளை அலங்கரிக்கும் பெயார்ஸ் ஃலோரல் தயாரிப்புகள் அறிமுகம்

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 01 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


யுனிலீவர் நிறுவனத்தின் நம்பகமான குழந்தைகள் சவர்க்கார தயாரிப்பான பெயார்ஸ்  வர்த்தகநாமத்தின் மூலம் மலர் தெரிவுகளினாலான குழந்தைகள் பராமரிப்பு தயாரிப்புகள் (Floral base products) அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இப் புதிய தயாரிப்புகளின் அறிமுகத்தை தொடர்ந்து, தமது நம்பிக்கைக்குரிய வாடிக்கையாளர் மத்தியில் வாடிக்கையாளர் வெகுமதி திட்டத்தினையும் முன்னெடுக்கவுள்ளது.

இப்புதிய பூக்களின் நறுமணம் கொண்ட தயாரிப்புகளின் வரிசையில், ஃலோரல் குழந்தைகள் சவர்க்காரத்தில் பால் புரோட்டீன்கள், மிதமான மொய்ஸ்ட்டுரைசர், மற்றும் மலர்ச்சாறு போன்றன அடங்கியுள்ளன. மேலும் பால் புரோட்டீன்கள் மற்றும் மொய்ஸ்ட்டுரைசர் கொண்ட ஃலோரல் கிரீமானது குழந்தையின் மென்மையான சருமத்திற்கு பாதுகாப்பினை அளிக்கிறது. மேலும் இயற்கை மலர்களால் தயாரிக்கப்பட்ட ஃலோரல் கொலோன் தயாரிப்பானது குழந்தையை எந்நேரமும் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.

இப் புதிய தயாரிப்புகளின் அறிமுகத்தை தொடர்ந்து, பெயார்ஸ் மூலம் குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு வெகுமதிகள் வழங்கும் குறிக்கோளுடன் 'தங்க நாணயம்'; வாடிக்கையாளர் வெகுமதி திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. கீறல் அட்டை (Scratch Card) ஊக்குவிப்பு திட்டத்தின் மூலம் தெரிவு செய்யப்படும் 150 வெற்றியாளர்களுக்கு வெகுமதியாக தங்க நாணயம் வழங்கப்படவுள்ளது.

இவ் வெகுமதி திட்டம் குறித்து கருத்து தெரிவித்த பெயார்ஸ் வர்த்தகநாமத்தின் உதவி வர்த்தகநாம முகாமையாளர் அன்யா தல்பதாது, 'பெயார்ஸ் ஃளோரல் தயாரிப்புகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தமது தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் கீறல் அட்டையில் (Scratch Card) குறிப்பிடப்பட்டுள்ள குறியீடு ஆகியவற்றை குறிப்பிட்ட இலக்கத்திற்கு அனுப்புவதன் மூலம் இத் திட்டத்தில் பங்கேற்க முடியும். வெற்றியாளர்கள் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்படுவர்'. என்றார்.

மேலும் அவர் 'நீண்டகாலமாக எமது வர்த்தகநாமத்துடன் கைகோர்த்துள்ள வாடிக்கையாளர்களின் வலுவான தொடர்பினை அடையாளப்படுத்தும் நோக்கில் பெயார்ஸ் வர்த்தகநாமத்தின் மூலம் தொடர்ச்சியாக வெகுமதி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன' என தெரிவித்தார்.
குழந்தைகளுக்கு உகந்ததும், தூய்மையான மற்றும் மென்மையான தயாரிப்புகளை வழங்கும் பெயார்ஸ் வர்த்தகநாமத்தின் அர்ப்பணிப்பு குறித்து யுனிலீவர் நிறுவனத்தின் குழந்தைகள் பராமரிப்பு தயாரிப்புக்கள் பிரிவின் தலைவர் ஷர்மிளா பண்டார கருத்து தெரிவிக்கையில், 'குழந்தைக்கும், தாய்க்கும் பாதுகாப்பு மற்றும் மென்மையான தயாரிப்புகளை வழங்கும் அதன் உறுதியான நாட்டம் காரணமாக பெயார்ஸ் வர்த்தகநாமமானது சந்தையில் முன்னணி குழந்தைகள் பராமரிப்பு தயாரிப்பாக வளர்ச்சியடைந்துள்ளது. மேலும் பெயார்ஸ் வர்த்தகநாமமானது வாடிக்கையாளர்களுக்கு பலவித அனுகூலங்களை வழங்கி, தொடர்ந்தும் சந்தையில் முன்னணியில் திகழ்கிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .