2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

அதிகளவு விற்பனை ஆர்வத்தால் பங்குச்சந்தை நேற்று சரிவு

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 02 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு பங்குச்சந்தையில் அதிகளவு உள்நாட்டு முதலீட்டாளர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டமையை நேற்றைய தினம் அவதானிக்க முடிந்தது.

இதன் காரணமாக பிரதான விலைச்சுட்டி 30.48 புள்ளிகள் வீழ்ச்சியடைந்திருந்தது. அதேபோன்று S&P SL20 விலைச்சுட்டெண் 3281.63 ஆக பதிவாகியிருந்ததுடன், கடந்த வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இது 11.94 புள்ளிகள் வீழ்ச்சி என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியான இலாபமீட்டும் நோக்கிலான பங்கு விற்பனை மற்றும் ஆராய்வுடனான முதலீடுகள் போன்றவற்றின் காரணமாக இந்த சரிவு ஏற்பட்டிருந்ததாக பங்கு முகவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலை தொடரக்கூடிய வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாகவும், எதிர்வரும் நாட்களில் அதிகளவு பேரம் பேசலை நாம் அவதானிக்க முடியும் எனவும் பங்கு முகவர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .