2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

செலான் வங்கியின் சிறந்த வங்கிக் கிளையாக மட்.கிளை தெரிவு

Kogilavani   / 2013 ஏப்ரல் 10 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


செலான் வங்கிக் கிளைகளின் சாதனையாளர் விருது 2012- 13க்கான சிறந்த வங்கிக கிளையாகத் தெரிவு செய்யப்பட்ட மட்டக்களப்பு வங்கிக்கிளை முகாமையாளருக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பு செலான் வங்கிக் கிளையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு வங்கிக்கிளை உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வைபவத்தில் சிறப்பு அதிதிகளாக செலான் வங்கியின் பிரிவு- 2 க்கான பிரதிப் பொது முகாமையாளர் கலாநிதி பி.நிரஞ்சன், கிழக்குப் பிராந்திய முகாமையாளர் முத்ததிஸ்ஸ (முரளி) ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன் மட்டக்களப்பிலுள்ள ஏனைய செலான் கிளைகளின் முகாமையாளர்கள், உதவி முகாமையாளர்கள் உத்தியோகத்தர்கள் மற்றும் வாடிக்கையாளர்களும் கலந்துகெண்டனர். 

மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் சார்பில் அதன் தலைவர் எஸ்.செல்வராசா, மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் அமிர்தலிங்கம் மற்றும் வர்த்தகர்கள், வாடிக்கையாளர்களும் முகாமையாளருக்கான கௌரவிப்புகளை வழங்கினர்.

மட்டக்களப்பிற்கு செலான் வங்கிக் கிளை இந்த வருடத்துக்கான சகல கிளைகளிலும் சிறந்த கிளை, தரம்1 கிளைகளில் சிறந்த கிளை, வங்கித்துறை தவிர்ந்த ஏனைய வருமானங்களை ஈட்டிக் கொண்டதில் சிறந்த கிளை ஆகிய மூன்று விருதுகளை பெற்றுள்ளது.

பணவைப்பு, கடன் வழங்கல், ஏனைய வருமானங்களை ஈட்டுதல், வரிக்கு முந்திய நிகரலாபம், வசூலிக்க முடியாத கடன்களின் அறவீடு, உள்ளிட்ட 5 துறைகளிலும் சிறந்து விளங்கும் கிளைக்கு சகல துறைகளிலும் சிறந்த கிளை விருது வழங்கப்படுகின்றது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .