2026 ஏப்ரல் 25, சனிக்கிழமை

என்.டீ.பி குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக ராஜேந்திர தியாகராஜா நியமனம்

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 26 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹற்றன் நஷனல் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றியன ராஜேந்திர தியாகராஜா, என்.டி.பி குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக ஓகஸ்ட் 24ஆம் திகதி முதல் தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

இதுவரை காலமும் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றிய ரசல் டி மெல் தமது பதவியிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, இ்நத புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக குழுமம் அறிவித்துள்ளது.

30 வருட காலம் என்டிபி குழுமத்தில் பணியாற்றிய அனுபவதை்தை கொண்டுள்ள ரசல் டி மெல் என்டிபி குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக 2010ஆம் ஆண்டிலிருந்து செயற்பட்டிருந்தார்.

ராஜேந்திர தியாகராஜா சுமார் 29 ஆண்டு காலம் வங்கியியல் துறையில் முன் அனுபவத்தை கொண்டுள்ளதுடன், ஹற்றன் நஷனல் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும், முகாமைத்துவ பணிப்பாளராகவும் 9 ஆண்டுகள் கடமை புரிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் வங்கிகளில் ஒன்றாக என்டிபி அமைந்துள்ளதுடன், மாலைதீவுகள் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கும் தனது சேவைகளை விஸ்தரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .