2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இலங்கைக்கு தொடர்ந்தும் பொருளாதார உதவிகளை வழங்க ஜப்பான் தீர்மானம்

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 07 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு தொடர்ந்தும் பொருளாதார உதவிகளை வழங்க ஜப்பான் தீர்மானித்துள்ளதாக இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜப்பானுக்கு ஒரு வார கால விஜயத்தை மேற்கொண்டிருந்த அமைச்சர், ஜப்பானின் உயர் மட்ட அரச அமைச்சர்களுடன் மேற்கொண்டிருந்த சந்திப்புகளை தொடர்ந்து, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.
 
இலங்கையின் உட்கட்டமைப்பு மற்றும் மனிதவள அபிவிருத்தி ஆகிய துறைகளை மேம்படுத்துவதற்கான உதவிகளை ஜப்பான் வழங்கவுள்ளது. இந்த விஜயத்தின் போது இலங்கையில் வலுப்பிறப்பாக்கல், மீன்பிடித்துறை வீதி புனரமைப்பு மற்றும் ஏனைய முக்கியமான தேவைகளை பூர்த்தி செய்ய உதவிகளை வழங்கியிருந்தமைக்கு இலங்கைசார்பில் நன்றிகளையும் தெரிவித்திருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .