
அறிவை விருத்திசெய்யும் வகையிலும், தனது விநியோக வலையமைப்பை மெருகேற்றும் நோக்குடனும், இதன் மூலம் வாடிக்கையாளர்களின் தேவைகளை மையமாககொண்ட ஓர் ஆடை அலங்கார தொடரை ஏற்படுத்தும் வகையில் ஃபஷன் பக், இலங்கையின் முன்னணி பயிற்சி நிறுவனமான விநியோக மற்றும் பொருட்கள் முகாமைத்துவ கல்வியகத்துடன் (ISMM) கைகோர்த்துள்ளது.
விநியோக வலையமைப்பு என்பது தொழில்நுட்ப ரீதியாகவும் சரக்கு கையாளல் ரீதியாகவும் மிகவும் சிக்கல் நிறைந்த செயற்பாடாக மாற்றமடைந்துவருவதன் காரணமாக, போட்டிகரத் தன்மையான வாடிக்கையாளர் சேவைகளை வழங்கும் வகையில் தமது அறிவு, ஆளுமை மற்றும் வினைத்திறன் ஆகியவற்றை விருத்திசெய்துகொள்ளும் வகையில் கல்வியகத்தின் மூலம் முன்னெடுக்கப்படவுள்ள பயிற்சிப்பட்டறைகள் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளில் பங்கேற்கவுள்ளது.
செயற்பாடுகள் மற்றும் விற்பனைபிரிவின் உதவி பொதுமுகாமையாளர் கலாநிதி ஃபராஸ் ஹமீட் கருத்து தெரிவிக்கையில், 'எமது நிறுவனம் முன்னணி கல்வியகங்களுடன் கொள்கை அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இதன் மூலம் எமது ஊழியர்களுக்கு புதிய நிர்வாக ஆளுமைகளையும் நுட்பங்களையும் வழங்கக்கூடியதாக இருக்கும். விநியோக மற்றும் பொருட்கள் முகாமைத்துவ கல்வியகத்துடன் (ISMM) உடன் நாம் கைகோர்த்துள்ளமையையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். தொடர்ச்சியான தொடர்பாடல்களின் ஊடாக எமது வாடிக்கையாளர்களுக்கு மேலும் சிறந்த சேவைகளை வழங்கக்கூடிய ஊழியர்சேவை குழுவை கட்டியெழுப்ப எண்ணியுள்ளோம்' என்றார்.
மனிதவள அபிவிருத்தி செயற்பாடுகளுக்கான முகாமையாளர் நாமல் ஏக்கநாயக்க கருத்து தெரிவிக்கையில், 'நாம் ஃபஷன் பக் காட்சியறைகளை தொழில் புரிவதற்கு சிறந்த பகுதிகளாகவும், பரந்த ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையிலும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி செயற்பட்டுவருகிறோம். நாம் தற்போது விநியோக மற்றும் பொருட்கள் முகாமைத்துவ கல்வியகத்துடன் (ISMM) உடன் ஏற்படுத்தியுள்ள உடன்படிக்கையின் மூலம் எமது விநியோக மற்றும் விற்பனை தொடர் முகாமைத்துவ செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளவர்கள் தமது அங்கத்துவத்தின் ஊடாக பல வளங்களை பெற்றுக் கொள்ள முடியும்' என்றார்.
இந்த உடன்படிக்கை செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது. இந்த நிகழ்வில் விநியோக மற்றும் பொருட்கள் முகாமைத்துவ கல்வியகத்தின் (ISMM) தலைவர் அனில் பொன்வீர, பயிற்சி பணிப்பாளர் கலாநிதி கிங்ஸ்லி விக்ரமசூரிய, பாடநெறி பணிப்பாளர் பி.ஜி.ஆரியதாச மற்றும் ஃபஷன் பக் சார்பாக ஃபராஸ் ஹமீட் மற்றும் நாமல் ஏக்கநாயக்க ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.
எமது கல்வியகத்தில் சிரேஷ்ட மற்றும் அனுபவம் வாய்ந்த பல ஆலோசகர்கள் காணப்படுகின்றனர். பல்வேறு பல்கலைக்கழகங்களையும், பொது மற்றும் தனியார் கல்வியகங்களையும் சேர்ந்தவர்களாக இவர்கள் காணப்படுகின்றனர். எமது நிபுணத்துவம் மற்றும் தொடர்ச்சியான ஆய்வறிக்கைகளின் மூலம் நாம் ஆரோக்கியமான பயணத்தை ஃபஷன் பக் உடன் முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்' என ஆரியதாச குறிப்பிட்டார்.
1972ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இந்த கல்வியகம் 'ஆளுமை, அறிவு மற்றும் பண்புகளின் ஊடாக சரக்கு வழங்கல் மற்றும் விநியோக வலையமைப்பு முகாமைத்துவம் ஆகிய துறைகளில் உலகத்தரம் வாய்ந்த நிபுணர்களை உருவாக்குவது என்பது தனது பிரதான நோக்கமாக கொண்டுள்ளது. தற்போது இந்த கல்வியகம் வெவ்வேறு தனியார் மற்றும் பொது நிறுவனங்களைச் சேர்ந்த 778 நிபுணர்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
இந்த கல்வியகம் சர்வதேச கொள்வனவு மற்றும் விநியோக முகாமைத்துவ சம்மேளனம் (IFPSM), தேசிய கொள்வனவு முகாமைத்துவ சம்மேளனம் (NAPM) மற்றும் தெற்காசிய முகாமைத்துவ அபிவிருத்தி கல்வியக சம்மேளனம் (AMDISA) ஆகியவற்றின் அங்கீகாரத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.