2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இலங்கை துறைமுக அதிகார சபை நாளொன்றில் அதிகளவான கொள்கலன் கையாள்கையை பதிவு செய்தது

A.P.Mathan   / 2013 நவம்பர் 07 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை துறைமுக அதிகார சபை நாளொன்றில் கையாண்ட அதிகளவான கொள்கலன்களின் எண்ணிக்கையை நவம்பர் 2ஆம் திகதி பதிவு செய்திருந்ததாக அறிவித்துள்ளது. இருபது அடி சம அளவுடைய 9884 கொள்கலன்களை ஒரே நாளில் கையாள்கை செய்து இந்த சாதனையை மேற்கொண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது. இதற்கு முன்னர் அதிகளவான கொள்கலன் கையாள்கை பெறுமதி 2013 ஜூன் 24ஆம் திகதி 9659 ஆக பதிவாகியிருந்தது.
 
ஒக்டோபர் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்த காலப்பகுதியினுள் மொத்தமாக 2,080,253 கொள்கலன்களை இலங்கை துறைமுக அதிகார சபை கையாண்டுள்ளதாகவும், இந்த கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியினுடன் ஒப்பிடுகையில் 7.5 வீத அதிகரிப்பு எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அண்மையில் இலங்கையின் துறைமுக கட்டமைப்பில் ஏற்படுத்தப்பட்டிருந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் மூலமாக அதிகளவு கொள்கலன்களை கையாள முடிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .