2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தொலைத்தொடர்பாடல் வரி அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான வரி வரவு செலவுத்திட்டல் அதிகரிப்பு

A.P.Mathan   / 2013 நவம்பர் 22 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில் நிதியமைச்சரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் தற்போது 20 வீதமாக காணப்படும் தொலைத்தொடர்பாடல் வரி, 25 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 
 
ஆனாலும் இணையப் பாவனைக்கான வரி தொடர்ந்தும் 10 வீதமாகவே பேணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுபோலவே, கோதுமை மா, சீஸ், தயிர், மாஜரின், சோஸ் வகைகள், செசேஜ் வகை, இனிப்பு வகைகள், சொக்லேட்கள், சீரியல் வகைகள், பஸ்டா, மோல்ட் மூலம் தயாரிக்கப்பட்ட பியர், வினாகிரி, மரக்கறி, காளான், கடலை மற்றும் பழங்கள், பழரசம், நுளம்புச் சுருள், வெட்டப்பட்ட மலர்கள் மீதான செஸ் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட போதிலும், அது குறித்த விபரங்கள்  வழங்கப்படவில்லை.

  Comments - 0

  • Ash Monday, 25 November 2013 06:04 AM

    எல்லாமே ஆடம்பரப் பொருட்கள், விலை அதிகரிப்பினால் ஏழைகள், அரச ஊழியர்கள் பாதிக்கப்படமாட்டார்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .