2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இளம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்கி வரும் சன்சில்க் - ரமணி பெர்னாண்டோ

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 05 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


சன்சில்க் ரமணி பெர்னாண்டோ ஹெயார் அன்ட் பியுட்டி அக்கடமி சிகையலங்காரம் மற்றும் அழகுகலை பராமரிப்பு துறையில் புதிய தொழில் முயற்சியாளர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கிறது. கடந்த 2005ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கல்வியகம் தற்போது 2013ஆம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழாவிற்கு தயாராகிவரும் நிலையில், இதுவரை 3000 திறமை வாய்ந்த மாணவர்களுக்கு இந்த துறையில் பட்டம் பெறக்கூடிய வகையில் தமது கற்கைகளை வழங்கி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இக் கல்வியகத்தின் 9ஆவது வருடாந்த பட்டமளிப்பு நிகழ்வு டிசம்பர் மாதம் 10ஆம் திகதி 'Great Gatsby' எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெறவுள்ளதுடன், 100இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சிகை மற்றும் அழகுக்கலை பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
 
இந்த துறையில் மிளிர விரும்பும் இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் கற்கையை பயின்று உயர் திறமை கொண்ட தொழில் முயற்சியாளர்களாக பிரகாசிக்க முடியும். சன்சில்க் வர்த்தகநாமத்தின் மூலம் இதுவரை 200 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 
அன்றாட வீட்டு வேலைகளைச் மேற்கொண்டு வந்த மஹேஷி குணசிங்க தற்போது வெற்றிகரமான முயற்சியாளராக உருவெடுத்துள்ளார். சன்சில்க் ரமணி பெர்னாண்டோ ஹெயார் அன்ட் பியூட்டி அக்கடமியில் டிப்ளோமா கற்கையை பூர்த்தி செய்த மஹேஷி தற்போது கண்டியில் சொந்தமாக ஒரு சலூனை நடத்தி வருகின்றார். இக் கல்வியகத்தின் நேர்முக செயற்திட்டத்தின் மூலம் சன்சில்க் புலமைப்பரிசிலினை இவர் பெற்றுக்கொண்டார். அவர் வாரத்தில் நான்கு தடவைகள் கண்டியிலிருந்து கொழும்பிற்கு காலை 4 மணிக்கெல்லாம் புறப்பட வேண்டியிருந்தது. ரயிலிலும், வகுப்பறையிலும் அதிக நேரத்தை செலவிட்ட மஹேஷி, விடாமுயற்சியுடன் படிப்பை தொடர்ந்து தனது நேரத்தை முறையாக சமாளித்திருந்தார். கடந்த 2006ஆம் ஆண்டு 'Maheshi Salon and Spa' எனும் பெயரில் வாடகை சலூனை அவர் ஆரம்பித்திருந்தார். அதன் பின்னர், சலூன் மூலம் உழைத்த பணத்தைக் கொண்டு அவ்வாடகை சலூனையே சொந்தமாக்கிக் கொள்ளவும் அவரால் முடிந்தது. இன்று அவருக்கு உதவியாக 5 பேர் பணிபுரிவதுடன், இன்று அவரது சலூன் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய கண்டியின் மிகப் பிரபல்யமான சலூனாக விளங்குகிறது.
 
சன்சில்க் புலமைப்பரிசில்தாரியும், இக் கல்வியகத்தின் பட்டதாரியுமான இமேஷி பெரேரா வாய், கேட்டல் குறைப்பாட்டை கொண்டவராவார். இருப்பினும் அவர் தனது முயற்சியை கைவிடவில்லை. விடாமுயற்சியும், அர்ப்பணிப்பும் கொண்ட இமேஷி இக் கல்வியகத்தில் சிகை அலங்கார டிப்ளோமா பயின்றதுடன், கடந்த 2007ஆம் ஆண்டின் சிறந்த சன்சில்க் மாணவியாக தெரிவு செய்யப்பட்டார். மேலும் அவர் சுயமாகவே கல்வியகத்திற்கு பயணித்து சிறந்த பேராசிரியர்களின் துணையுடன் தனது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.

 
இந்த பங்காண்மை குறித்து யுனிலீவர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் வர்த்தகநாம முகாமையாளர் நியோமி தெல்விட்ட கருத்து தெரிவிக்கையில், 'இலங்கையின் சிகை துறையில் முன்னோடியாக வர விரும்புவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு உதவும் இந்த  திட்டத்துடன் இணைந்துள்ளமை குறித்து பெருமையடைகிறோம். யுனிலீவர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் முதற்தர கூந்தல் பராமரிப்பு வர்த்தகநாமம் எனும் ரீதியில், இளம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தமது கனவினை நனவாக்கிக் கொள்வதற்கான வாய்ப்பினை வழங்கி அவர்களை சுயாதீன தொழில் முயற்சியாளர்களாக உருவாக்குவதற்கான ஊக்குவிப்புக்களை வழங்கி வருகின்றோம்' என தெரிவித்தார்.
 
இக் கல்வியகத்தின் பட்டதாரியாகவும், சன்சில்க் இரட்டை புலமைப்பரிசிலை பெற்றுள்ளதுடன், 'Salon Wedding' சலூனின் உரிமையாளராகவும் குமுது சத்துரானி உள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு பதுளையில் நடைபெற்ற சன்சில்க் 'ஹெடகாரி' திட்டத்தில் குமுது பங்குபற்றியுள்ளார். அப்போட்டியில் வெற்றியீட்டிய அவர் சன்சில்க் ரமணி பெர்னாண்டோ ஹெயார் அன்ட் பியூட்டி அக்கடமியில் சிகையலங்கார டிப்ளோமா கற்கையை தொடர்வதற்கான சன்சில்க் புலமைப்பரிசிலைப் பெற்;றுக் கொண்டார். இத்துறை மீதுள்ள அவரின் ஈர்ப்பு காரணமாக, நாடளாவிய ரீதியில் நடைபெற்ற மணமகள் அலங்காரப் போட்டியில் பங்குபற்றி உயர் டிப்ளோமா கற்கையை பயிலுவதற்கான இரண்டாவது சன்சில்க் புலமைப்பரிசிலையையும் பெற்றுக் கொண்டார்.
 
சிகை அலங்காரத்திலும், அழகுக்கலையிலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்த அனுஷ்கா ஹெட்டிகே கடந்த 2006 ஆம் ஆண்டில் சன்சில்க் ரமணி பெர்னாண்டோ ஹெயார் அன்ட் பியூட்டி கல்வியகத்துடன் இணைந்து கொண்டார். இக் கல்வியகத்தின் மூலம் சிகையலங்காரத்தில் Licentiateship விருது, சிகையலங்காரத்தில் டிப்ளோமா மற்றும் உயர் டிப்ளோமா, பியூட்டி தெரபி டிப்ளோமா மற்றும் கற்பித்தல் மற்றும் மதிப்பீட்டு டிப்ளோமா போன்றவற்றை அனுஷ்கா பெற்றுள்ளார். தற்போது ரமணி பெர்னாண்டோ கல்வியகத்தில் முகாமைத்துவ பயிற்றுவிப்பாளராக பணிபுரியும் அனுஷ்கா தனக்கு ஊக்குவிப்புக்களையும், வழிகாட்டல்களையும் வழங்கி தனது வெற்றிக்கு காரணமாக ரமணி பெர்னாண்டோ, லக்கி லெனகல மற்றும் கல்வி பணியாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோருக்கு தமது நன்றிகளை தெரிவித்தார்.
 
அனைத்து திறமைகளையும் தன்சவசம் கொண்ட நஷாலி பெர்னாண்டோ அவர்கள் கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து ரமணி மற்றும் அவரது குழுவினருடன் இணைந்து பணியாற்றி வருகின்றார். அவர் தனது அனுபவம் குறித்து தெரிவிக்கையில், 'டிப்ளோமா கற்கையின் போது பயின்றவற்றை தற்போது சலூனில் நடைமுறையில் செய்து பார்க்கின்றேன். சலூனில் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய விடயத்தை கற்றுக் கொள்கிறேன். கூந்தல் மற்றும் அழகு தெரபி துறையில் சாதனையீட்டுவதே எனது குறிக்கோளாகும்' என தெரிவித்தார். மேலும் இவர் Chior “Choro Calibre” குழுவின் சிரேஷ்ட அங்கத்தவராக உள்ளதுடன், இம்முறை நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் தனது திறமைகளை வெளிப்படுத்தவுள்ளார்.
 
மாணவர்கள் வருகையின் அதிகரிப்பை தொடர்ந்து, 2013இல் நடைபெறும் இரண்டாவது பட்டமளிப்பு நிகழ்வாக இவ் விழா அமைந்துள்ளதுடன், சிகை மற்றும் அழகு பராமரிப்பு பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. இம்முறை விருதுகள் வழங்கும் நிகழ்வினை தொடர்ந்து, கல்வியகத்தின் அழகுக்கலை பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் ஏற்பாட்டில் அழகுக்கலை காட்சி நிகழ்வு நடைபெறவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .