Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 மார்ச் 05 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீங்கள் வங்கி கணக்கொன்றிலோ அல்லது வேறு எங்கேனும் பணத்தை முதலீடு செய்யும் போது உங்கள் பணத்தின் பாதுகாப்பு தொடர்பிலேயே அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.
'எதிர்கால இலாபம் குறித்த எதிர்பார்ப்புகளுடன் நாம் முதலீடுகளை மேற்கொள்கிறோம். ஆகவே இந்த இலாபங்களை எவ்வாறு அடையலாம் என்பதை நாம் நன்குணர்ந்திருக்க வேண்டும்' சதாஹரித பிளாண்டேஷனின் தலைவர் சதீஷ் நவரத்ன தெரிவித்தார்.
புதிய வகையிலான வனவியல் முதலீட்டு தீர்வுகளை வழங்குவதில் முன்னோடியான சதாஹரித நிறுவனம் அதன் முதலீட்டாளர்களுக்கு முதல் தர சேவைகளை வழங்கி வனவியலில் சிறந்த முதலீட்டு திரும்பல்களை வழங்கி வருகிறது. 'எமது நோக்கம் என்பது பணத்தை சம்பாதித்து பின்னர் தலைமறைவாதல் எனும் குறுகிய கால இலக்கினை அடிப்படையாகக் கொண்டதல்ல' என நவரத்ன வலியுறுத்தினார்.
சந்தனம் மற்றும் தேக்கு பிளாண்டேஷன் ஊடாக நிலையான வனவியலை வழங்கும் நிறுவனம் எனும் ரீதியில், சதாஹரித பிளாண்டேஷன் அகர்வுட் செய்கை மூலமாகவும் சிறந்த சந்தை திரும்பல்களை பெறப்படுவதை உறுதி செய்து வருகிறது. அகர்வுட் மூலம் குறுகிய காலத்தில் உயர் திரும்பல்கள் பெற்றுக் கொடுக்கப்படுகிறது' என தெரிவித்தார்.
'சட்டம் மற்றும் சட்ட மூல கட்டமைப்பிற்கமைய செயற்படும் சதாஹரித நிறுவனமானது நம்பிக்கையுடன் அகர்வுட்டினை முதலீட்டு திட்டமாக வழங்கி வருகிறது. முறையான தொழில்நுட்பம், முதலீட்டாளர்களின் சொந்த நிலத்திற்கே பயிர்களை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து வசதி, சந்தையில் இவ்வுற்பத்தியை பயன்படுத்தும் இறுதி பயனாளர்களுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கமைய இறுதி உற்பத்தியை சந்தையில் பெறுவதற்கான உத்தரவாதம் போன்றவற்றை நாம் வழங்கி வருகிறோம்' என நவரத்ன தெளிவுபடுத்தினார்.
'அகர்வூட்டினை வணிக ரீதியான வனவளர்ப்பு முதலீடாக அறிமுகம் செய்த முதல் நிறுவனம் சதாஹரித ஆகும். நாம் ஆரோக்கியமான தாய் மரங்களிலிருந்து பெறப்படும் விதைகளை இறக்குமதி செய்கிறோம். நாம் மரங்களின் மரபுவழி தொடர்பான சான்றுகள், விழிப்புணர்வு மற்றும் அறிவினை கொண்டுள்ளோம். இலங்கையில் CA Kit (அகர்வுட் உற்பத்தி) இற்கான ஏக காப்புரிமை எம்மிடம் மாத்திரமே உள்ளது. இந்த தொழில்நுட்பத்தை வேறு எவரேனும் விற்கவோ அல்லது அறிமுகப்படுத்தவோ முடியாது' என்றார்.
முதலீட்டாளர்கள் முதலீட்டினை மேற்கொள்ள முன்னர் பின்வரும் விடயங்கள் குறித்து அறிந்து வைத்திருத்தல் வேண்டும், 'குறித்த நிறுவனம் சிறந்த நோக்கத்தை கொண்டுள்ளதா, அவர்கள் நீண்டகாலமாக வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனரா, அவர்கள் நீண்டகாலம் நிலைத்திருக்க திட்டமிட்டுள்ளார்களா அல்லது ஒரு சில மாதங்களிலோ அல்லது ஒருசில ஆண்டுகளிலோ தொழிலை முடக்கிக்கொள்ளவுள்ளனரா, வணிகத்தில் ஈடுபடக்கூடிய வலிமையை நிறுவனம் கொண்டுள்ளதா, தேவையான ஊழியர்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவினை நிறுவனம் கொண்டுள்ளதா, ஊழியர்கள் நிறுவனத்தின் பயணத்துடன் ஒருநிலைப்படுத்தப்பட்டுள்ளனரா போன்றவையாகும் என நவரத்ன விளக்கினார்.
சதாஹரித பிளாண்டேஷனின் நிர்வாக சபை, தலைவர், வணிக மாதிரிகள், வாடிக்கையாளருக்கான உறுதிமொழிகள், கொடுப்பனவுகள் என்பவை தொடர்பிலான எதுவித முறைபாடுகளோ அல்லது மோசடிகளோ பதிவு செய்யப்பட்டில்லை என்பதை எமது முதலீட்டாளர்கள் நன்கறிந்துள்ளனர். எமது மாதிரி தெளிவானது. எமது பிளாண்டேஷனுக்கோ அல்லது கன்றுகள் வளர்ப்பு பண்ணைக்கோ விஜயம் செய்து உண்மைத்தன்மையை நேரடியாக காண வருமாறு அனைவரிடமும் அழைப்பு விடுக்கிறோம்' நவரத்ன வலியுறுத்தினார்.
'இலாபகரமான வணிக வனவியலை அறிமுகம் செய்த முதல் நிறுவனம் சதாஹரித ஆகும். தமது கடின உழைப்பின் ஊடாக சம்பாதித்த பணத்தை எவ்வாறு முதலீடு செய்வது என்பது தொடர்பில் முதலில் வாடிக்கையாளர் நன்குணர வேண்டும்' என நவரத்ன வலியுறுத்தினார்.
5 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
9 hours ago