Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஏப்ரல் 02 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்லாமிய வங்கியியல் கொள்கைகளுக்கு அமைய இலங்கையில் செயற்பட்டு வரும் முதலாவது உத்தரவுபெற்ற வர்த்தக வங்கியான அமானா வங்கி, உலகின் மிகவும் பிரபலமான இஸ்லாமிய நிதிச் செய்தி ((IFN) விருது விழாவில் இலங்கையின் மிகச் சிறந்த இஸ்லாமிய வங்கிக்கான விருதைப் பெற்று மீண்டும் ஒருமுறை வெற்றி கண்டுள்ளது. மலேஷpயாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் ரெட்மனி குரூப் நிறுவனத்தினால் 2014ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு உலகலாவிய தேர்வின் அடிப்படையில் இந்த ஐகுN விருது வழங்கப்பட்டுள்ளது. உலக சந்தைகளில் செயற்பட்டு வரும் மிகச் சிறந்த இஸ்லாமிய நிதிச் சேவை வழங்குனர்களிலிருந்து உலகின் மிகச் சிறந்த இஸ்லாமிய வங்கி, நாட்டின் மிகச் சிறந்த இஸ்லாமிய வங்கி, மிகச் சிறந்த மத்திய வங்கி மற்றும் வருடத்திற்கான மிகச் சிறந்த இஸ்லாமிய வங்கிக் கொடுக்கல்வாங்கல்கள் தெரிவு செய்யப்பட்டன.
அண்மையில், கோலாலம்பூரின் ஷங்ரி-லா ஹோட்டலில் நடைபெற்ற விருது விழாவில் அமானா வங்கிக்குரிய விருதை வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. முஹம்மத் அஸ்மீரிடம் வழங்கப்பட்டது.
வங்கிக்கான நான்காவது ஐகுN விருது கிடைக்கப் பெற்றுள்ளமை குறித்து கருத்து வெளியிட்ட திரு. முஹம்மத் அஸ்மீர் அவர்கள் 'தொடர்;ந்து நான்காவது வருடமாக நாட்டின் மிகச் சிறந்த இஸ்லாமிய நிதிச் சேவை வழங்குனராக உலகலாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்டிருப்பதானது எமது வங்கி பெற்றுக்கொண்ட மிகச் சிறந்த சாதனையாகும். இது குறித்து நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். கடந்த சில வருடங்களாக, அமானா வங்கி இலங்கையில் இஸ்லாமிய வங்கியியல் மற்றும் நிதித் துறையில் ஒரு வலுவான தடத்தை பதிப்பதில் வெற்றிகண்டு வருகின்றது. எமது சொத்து மற்றும் வைப்புக்களில் நாம் அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம் மூலம் இது பிரதிபலிக்கப்படுகின்றது. இந்த விருது ஒரு உலகலாவிய வாக்கெடுப்பின் அடிப்படையில் அமைந்திருப்பதால், உலகம் பூராகவும் உள்ள மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை இது எடுத்துக் காட்டுகின்றது. வங்கியின் இந்த வெற்றிக்கு ஆதரவு வழங்கிய அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், பங்காளிகளுக்கும், ஊழியர்களுக்கும் நான் இதயபூர்வமான நன்றிகளை தெரிவிக்கின்றேன்' என்றார்.
உலகில் மிகச் சிறந்த வங்கிகளை தெரிவு செய்வதற்காக ஐகுN நிறுவனம் பக்கச்சார்பற்ற அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய ஒரு அணுகுமுறையை கடைபிடிக்கின்றது. 2005ம் ஆண்டில் இயங்க ஆரம்பித்ததில் இருந்து, இந்த நிறுவனம் சமகால இஸ்லாமிய நிதிச் சந்தை நிலமையை தொடர்ந்தும் சரியான முறையில் எடுத்துக்காட்டும் அதேவேளை, இஸ்லாமிய நிதித் துறையின் மிகவும் விரிவான வருடாந்த வாக்கெடுப்பாக இது அமைந்துள்ளது. உலகம் முழுவதிலிருந்து இஸ்லாமிய நிதி வழங்குனர்கள், முதலீட்டாளர்கள், வங்கிசாரா நிதி நடுவர்கள் மற்றும் அரச நிறுவனங்கள் என்பன இந்த வாக்கெடுப்பில் பங்கேற்குமாறு அழைக்கப்படுகின்றன.
கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அமானா வங்கி, அண்மையில் அமெரிக்காவின் வொஷpங்டன் நகரில் நடைபெற்ற 18ஆவது வருடாந்த உலகின் மிகச் சிறந்த வங்கிகளைத் தெரிவு செய்யும் விருது விழாவில் குலோபல் பைனான்ஸ் சஞ்சிகையினால் உலகில் முன்னேறி வரும் மிகச் சிறந்த இஸ்லாமிய வங்கியாக அங்கீகரிக்கப்பட்டது. தனது மூலோபாய பங்காளிகளான மலேஷpயா பேர்ஹாட் இஸ்லாமிய வங்கி, சவுதி அரேபியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி, பங்களதேஷpன் ஏ.பீ. வங்கி ஆகியவற்றின் மூலம் ஊக்குவிக்கப்பட்டுள்ள அமானா வங்கி இலங்கையின் வங்கித் துறைக்குள் ஒரு புதிய பாதையை உருவாக்கி வருவதோடு, நாடு பூராகவும் வளர்ந்து வரும் ஒரு பிரத்தியேக வங்கி முறைக்கான சந்தை வாய்ப்பில் தமது மூலதனத்தை மையப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றது.
1 hours ago
2 hours ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
6 hours ago