A.P.Mathan / 2015 ஏப்ரல் 12 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட்(சிபிஎல்) நிறுவனத்தின் முன்னணி வர்த்தகநாமமான மஞ்சி ஆனது அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற 2015 SLIM நீல்சன் மக்கள் விருது வழங்கும் நிகழ்வில் மீண்டும் ஒருமுறை இளைஞர்களின் மனம் கவர்ந்த வருடத்திற்கான FMCG வர்த்தகநாமமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விருதானது மஞ்சி நாமத்தின் வலுவான கவனம் மற்றும் நாடு முழுவதுமுள்ள இளைஞர்களுடனான நெருங்கிய இணைப்பினை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
இலங்கை சந்தைப்படுத்தல் கல்வியகம் (SLIM) மற்றும் முன்னணி ஆராய்ச்சி நிறுவனமான நீல்சன் இணைந்து வருடாந்தம் மேற்கொள்ளும் இந்த SLIM நீல்சன் மக்கள் விருதுகள் நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்படும் பரந்துபட்ட ஆராய்ச்சிகளை அடிப்படையாக கொண்டது. இதன் போது சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் நாட்டில் குறிப்பிட்ட தாக்கத்தை உண்டாக்கிய வர்த்தகநாமங்கள் தொடர்பான இலங்கையரின் உண்மையான எண்ணங்கள் வெளிப்படுத்தப்;படுகின்றன.
மேலும் அதே நிகழ்வில் சுப்பர் கிறீம் கிறக்கர் இன் புதுமையான சுப்பர்மேன் தொலைக்காட்சி விளம்பரத்திற்காக வருடத்திற்கான மக்கள் விளம்பர விருதினையும் மஞ்சி தனதாக்கிக் கொண்டது.
'இந்த பெருமைக்குரிய இரு விருதுகளையும் வென்றதையிட்டு நாம் மிகவும் பெருமையடைவதுடன், வருடத்திற்கான இளைஞர்களின் மனம் கவர்ந்த FMCG வர்த்தகநாமமாக தெரிவு செய்யப்பட்டமையானது எமது இளைஞர்களின் குரலினை பிரதிபலிக்கிறது' என சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் குழும பணிப்பாளரும், சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவின் தலைவருமான நந்தன விக்ரமகே தெரிவித்தார். 'எமது இளைஞர்கள் மஞ்சியுடன் நெருங்கிய இணைப்பினை கொண்டிருப்பதை நாம் அறிவோம். எம் மீது வைத்த நம்பிக்கை மற்றும் வாக்களிப்பு செயல்பாடுகளில் பங்குபற்றியமைக்காக அவர்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்' என அவர் மேலும் தெரிவித்தார்.
'மஞ்சி வர்த்தகநாமத்தின் புத்தாக்கம், தயாரிப்பு திருப்தி, நுகர்வோர் போக்குகளை புரிந்து கொள்ளுதல் மற்றும் சிறந்த சமூக அபிவிருத்தி திட்டங்கள் போன்ற அனைத்தும் மஞ்சியின் வெற்றிக்கு பங்களிப்பு வழங்கியுள்ளன' என மேலும் அவர் தெரிவித்தார்.
மஞ்சியானது சமூக அபிவிருத்தி மற்றும் குழந்தைகளின் கல்வி தொடர்பான பிரதான கூட்டாண்மை சமூக பொறுப்புணர்வு (CSR) திட்டங்களின் போது தேசத்தின் இளைஞர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றது. CBL இன் வர்த்தக குறியீட்டு விரிவாக்கல்கள் உள்நாட்டு இளைஞர்களுக்கான புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதில் பாரிய பங்கினை செலுத்தியுள்ளன.
SLIM நீல்சன் மக்கள் விருதுகள் நீல்சன் நிறுவனத்தினால் தொடர்ச்சியாக ஆறு மாதங்கள் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் ஊடாக வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவர். நாட்டின் 9 மாவட்டங்களையும் சேர்ந்த 15 முதல் 60 வயதுக்குட்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்புகள் மூலம் விருதுகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
2011 SLIM நீல்சன் மக்கள் விருதுகள் விழாவில் மஞ்சியானது ஆண்டிற்கான FMCG வர்த்தகநாமமாகவும், SLIM நீல்சன் மக்கள் இளைஞர் உணவு வர்த்தகநாமமாகவும் கௌரவிக்கப்பட்டிருந்தது. மேலும் 2012 ஆண்டிலும் வருடத்திற்கான FMCG உணவு வர்த்தகநாமம் மற்றும் வருடத்திற்கான இளைஞர் உணவு வர்த்தகநாமமாக தெரிவு செய்யப்பட்டிருந்தது. இலங்கையின் பிஸ்கட் சந்தையில் சந்தை முன்னோடியாக மஞ்சி விளங்குவதுடன், 50 இற்கும் மேற்பட்ட நாடுகளில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
38 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
49 minute ago