A.P.Mathan / 2015 மே 11 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி நிறுவனம், தேசிய வர்த்தக சம்மேளனத்தின் (NCCSL) மூலம் ஏற்பாடு செய்யப்படும் தேசிய வர்த்தக சிறப்பு விருதுகள் வழங்கும் நிகழ்வில் மிக உயரிய விருதாக கருதப்படும் இரு தங்க விருதுகளை வென்றுள்ளது.
புத்துருவாக்க வர்த்தகத் தீர்வுகளை செயல்படுத்துவதில் நிறுவனத்தின் செயற்திறனை கௌரவிக்கும் வகையில் 'காப்புறுதி பிரிவில் வர்த்தக செயற்திறன்' இற்காக தங்க விருது வழங்கப்பட்டது. மேலும் சிறந்த மக்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட செயல்முறையை விருத்தி செய்வதற்காக தொழிற்துறையில் மாற்றத்தை உண்டாக்கக்கூடிய அணுகுமுறையை கையாள்வதற்காக 'திறன் கட்டியெழுப்புதல் செயற்திறன்' இற்கான தங்க விருதும் வழங்கப்பட்டுள்ளது.
'இந்த வெற்றியானது எமது அணியினரின் அர்ப்பணிப்பையும், உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்பு மற்றும் சேவைகளை போட்டி நிறைந்த சந்தையில் ஜனசக்தி வழங்குவதை சான்று பகர்கிறது. மேலும் இவ் விருதானது எமது தற்போதைய முதலீடுகள் மற்றும் எமது வணிகத்தில் சிறந்து விளங்குவதற்கான அர்ப்பணிப்பையும் வெளிக்காட்டுகிறது' என ஜனசக்தி காப்புறுதியின் முகாமைத்துவ பணிப்பாளர் பிரகாஷ் ஷாஃப்ட்டர் தெரிவித்தார்.
ஒரு தசாப்தத்திற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட தேசிய வர்த்தக சிறப்பு விருதுகள் நிகழ்வானது அனைத்து விடயங்களிலும் சிறப்பாக செயலாற்றிய நிறுவனங்களை கௌரவித்து வரும் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய வருடாந்த நிகழ்வாக காணப்படுகிறது.
இந் நிகழ்வில் மக்களுக்கு உந்துசக்தி அளித்தல், வாடிக்கையாளர் மதிப்பு மற்றும் வணிக முடிவுகளை வழங்குவதற்கு வளங்கள் மற்றும் செயல்முறை, உள்நாட்டு நிறுவனங்கள் மத்தியில் புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தல், தொடர் கற்றல் அனுபவம், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பங்களிப்பு வழங்குவதோடு தமது போட்டித்தன்மைய மேம்படுத்துதல் போன்றவற்றில் செயற்திறனை வெளிப்படுத்தும் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
இவ் விருதுகளுக்காக கிடைத்திருந்த விண்ணப்பங்கள், தலைமைத்துவம், கூட்டாண்மை ஆளுகை, திறன் கட்டியெழுப்பல், செயற்திறன் நிர்வாகம், சந்தை அடைவு, நிலையாண்மை மற்றும் வணிக செயற்திறன் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையான மற்றும் நிதி முடிவுகள் போன்ற பிரிவுகளில் நடுவர் குழுவினரால் தரமான அணுகுமுறையின் கீழ் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதில் தொழிற்துறையை சேர்ந்த முன்னணி தலைவர்களினால் முன்மொழியப்பட்ட மதிப்பீடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. நடுவர் குழுவில் பேராசிரியர்.உதித்த லியனகே(தலைவர்) - PIM இன் முகாமைத்துவ பேராசிரியர், டாக்டர்.அரித்த விக்ரமநாயக்க - Nithya Partners முன்னோடி பங்குதாரர், பாதுகாப்பு மற்றும் பரிமாற்றல் ஆணைக்குழுவின் முன்னாள் பொது பணிப்பாளர், நிஹால் அபேசேகர – ஜப்பான் லங்கா தொழிற்துறை அபிவிருத்தி நிலையத் தலைவர், டாக்டர் பெனலொப் ஹுட் - ஹுட் இன்டர்நெஷனல் கன்சல்டன்ட் (UK) - பணிப்பாளர், கல்வி அமைச்சு மற்றும் தேசிய கல்வி நிறுவனத்திற்கான ஆலோசகர், ரவி பீரிஸ் - சிலோன் தொழில் சம்மேளனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி, பொது பணிப்பாளர், பிரவீர் சமரசிங்க – Overseas Realty Ceylon பிஎல்சியின் குழு CEO/ பணிப்பாளர், ஃபெய்சல் செல்லையா - அமானா வங்கியின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி/ முகாமைத்துவ பணிப்பாளர் ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர்.
1994ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந் நிறுவனம் ஆயுள் மற்றும் பொது வணிகப் பிரிவுகளில் ஈடு இணையற்ற வர்த்தக மற்றும் அபாய முகாமைத்துவ தீர்வுகளை வழங்கி வருகின்றது. சமூக பொறுப்பின் ஓர் அங்கமாக, ஜனசக்தி கடந்த ஆண்டுகளில் பாதசாரிகள் கடக்குமிடத்தில் மக்களுக்கு பாதுகாப்பளிக்கும் திட்டங்கள், சுனாமி உதவி திட்டங்கள், CKD மற்றும் டெங்கு ஒழிப்பு திட்டங்கள், பாதுகாப்பான போத்தல் விளக்கு திட்டங்களுக்கு நிதியளித்துள்ளதுடன், நீர் பாதுகாப்பு, மெய்வல்லுநர், ஹொக்கி, கிரிக்கெட், படகோட்டம், கோல்ஃப், ஸ்கொஷ் போன்ற விளையாட்டுகளுக்கு அனுசரணை வழங்கி இலங்கையில் விளையாட்டிற்கு பங்களிப்பு வழங்குவதில் முன்னோடியாக விளங்கி வருகிறது. வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், பங்குதாரர்களுக்கு பெறுமதி சேர்த்தல் மற்றும்; 20 ஆண்டுகளாக நாட்டிற்கு சேவையாற்றும் சிறந்த கூட்டாண்மை ஆளுகையானது நிறுவனத்தின் அடையாளத்தை சமூக பொறுப்பு வாய்ந்த நிறுவனமாக நிலைநாட்டியுள்ளது.
நிலையான நிதி ஸ்திரத்தன்மையை பேணி வரும் ஜனசக்தியானது அதன் காப்புறுதிதாரர்களுக்கு 30 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நஷ்டஈட்டுகளை செலுத்தியுள்ளது. அரசிற்கு சொந்தமான காப்புறுதி நிறுவனமொன்றை கொள்வனவு செய்த ஒரேயொரு நிறுவனமாக ஜனசக்தி திகழ்கின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .