Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 மே 11 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
1964 ஆம் ஆண்டு தாபிக்கப்பட்ட, பரிபூரண காகிதாதிகள் தீர்வுகளை வழங்கும் ஜெஸ்டெட்னர், கடந்த ஆண்டில் தனது 50 ஆவது வருட பூர்த்தியை பொது பட்டியலிடப்பட்ட நிறுவனமாக கொண்டாடியிருந்தது. எதிர்காலத்துக்கேற்ப தன்னை மாற்றியமைத்துக் கொள்ள முன்வந்துள்ளது.
ஆரம்பத்தில் 3ஆக காணப்பட்டு, தற்போது 21ஆக விரிவடைந்துள்ள வேகமாக வளர்ந்து வரும் வலையமைப்புடன், கம்பனி தனது சந்தை பங்கையும் விஸ்தரித்துள்ளது. துறையில் காணப்படும் முதல் மூன்று தீர்வுகள் வழங்குநர்களில் ஒன்றாக தன்னையும் நிலைநிறுத்தியுள்ளது.
ஜெஸ்டெட்னர் ஒஃவ் சிலோன் பிஎல்சி, தனது புதிய வர்த்தக குறியீட்டை சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற வைபவத்தின் போது அறிமுகம் செய்திருந்தது. இந்நிகழ்வு ஏப்ரல் 29ஆம் திகதி இடம்பெற்றிருந்தது. புதிய வர்த்தக குறியீடு, விறுவிறுப்பூட்டும் வகையில் சிவப்பு மற்றும் நீல நிறங்களில் அமைந்துள்ளது. தெளிவான 'G' எனும் எழுத்தின் மூலமாக கம்பனியின் மூலமாக வழங்கப்படும் முழுமையான தீர்வுகள் வழங்கப்படுவதை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளதுடன், நேர்த்தியான அம்பு ஒன்றின் மூலம் எய்தப்படும் வளர்ச்சி என்பது பிரதிபலிக்கப்படுகிறது.
முன்னொருபோதுமில்லாத வகையில் ஜெஸ்டெட்னர் தன்னை உயர்ந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது. புதிய மற்றும் மறுசீரமைக்கப்பட்ட அணியினருடன், கம்பனியை சிறந்த பாதையில் வழிநடத்திச் செல்லும் வகையில் செயலாற்றுவதுடன், அனுபவம் வாய்ந்த நபர்களும் கம்பனியுடன் இணைந்து கொண்டுள்ளனர். ஜெஸ்டெட்னர் மூலமாக அதிகளவு கவனிப்பு மற்றும் வாடிக்கையாளர்களை மையமாக கொண்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.
சொந்த, ஒப்பந்தமளிக்கப்பட்ட அல்லது தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும், அவற்றின் நாளாந்த காகிதாதிகள் தேவைகளை சிக்கனமாக நிர்வகிக்கும் பொறுப்பை ஜெஸ்டெட்னர் மேற்கொண்டு வருகிறது. புத்தமைவான வன்பொருட்கள் மற்றும் மென்பொருட்கள் முகாமைத்துவம் போன்றவற்றின் மூலமாக வேலை விநியோகம் மற்றும் இலாபங்கள் போன்றன உறுதியளிக்கப்படுகின்றன.
70 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் நம்பிக்கையை வென்ற மற்றும் மதிப்பை பெற்ற நிறுவனம் என்பதுடன், துறைசார் முன்னோடியாக திகழும் ஜெஸ்டெட்னர் நிறுவனத்தின் சேவைகளில் உலகின் முன்னணி அலுவலக தன்னியக்க வர்த்தக நாமங்கள் உள்ளடங்கியுள்ளன. அதன் மூலமாக நம்பிக்கை, தங்கியிருத்தல் மற்றும் பணத்துக்கு பெறுமதி போன்றன வழங்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது. நிறுவனத்தின் விரிவடைந்து செல்லும் பொருட்களில் Ricoh, BenQ, Fujitsu மற்றும் Lenovo போன்றன உள்ளடங்கியுள்ளன. நஷுவா லங்கா பிரைவேற் லிமிடெட், (ஜெஸ்டெட்னர் ஓஃவ்செட்) மற்றும் ஜெஸ்டெட்னர் பிரின்டிங் சேர்விசஸ் (பிரைவேற்) லிமிடெட், (ஜெஸ்டெட்னர் அவுட்சோர்ஸ்) போன்றன தாய் நிறுவனமான ஜெஸ்டெட்னர் ஒஃவ் சிலோன் பிஎல்சி நிறுவனத்தின் மேற்பார்வையின் கீழ் இயங்கி வருகின்றன.
ஜெஸ்டெட்னர் நிறுவனத்தின் பிரதான வியாபார பொருட்கள் ஜப்பானிய நாட்டு பொருட்களாக அமைந்துள்ளன. இவற்றின் மூலமாக Ricoh சர்வதேச சந்தையில் முதல் தர நிலையை தக்க வைத்துள்ளது. ஃபுஜிட்சு தயாரிப்புகள் ஜப்பான் நாட்டில் முதல் தர மடிக்கணினிகள் எனும் நிலையை கொண்டுள்ளன. அத்துடன் சர்வதேச சந்தையில் முதல் மூன்று நிலைகளில் ஒன்றை BenQ புரொஜெக்டர்கள் கொண்டுள்ளன. உயர் தரம் வாய்ந்த டிஜிட்டல் அச்சிடல் மற்றும் ஓஃவ்செட் அச்சுப்பிரதிகளை வழங்குவதற்கு மேலதிகமாக சாதனங்களை விற்பனை செய்வது மற்றும் வாடகைக்கு வழங்குவது போன்ற செயற்பாடுகளை கம்பனி மேற்கொண்டு வருகிறது.
தனது P2P (அச்சிடல் முதல் இலாபம் வரை) சேவை ஊடாக, சாதனங்கள் விநியோகிக்கப்படுவதுடன், வாடிக்கையாளர்கள் எடுக்கும் பிரதிகளுக்கான கொடுப்பனவை மேற்கொள்வார்கள். சேவைகள் மற்றும் மாற்றீடுகளுக்கான செலவுகள் கம்பனியால் பொறுப்பேற்கப்படும். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த செலவீனம் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. தமது சொந்த பாரிய வாடிக்கையாளர் வலையமைப்புக்கு வௌ;வேறு குறியீடுகளை வழங்கி அவற்றின் மூலம் குறித்த வாடிக்கையாளர்களினால் மேற்கொள்ளப்படும் பிரதிகளின் எண்ணிக்கை கணக்கிடப்படும். அதற்கமைய கட்டணம் அறவிடப்படும்.
நிறுவனத்தின் தயாரிப்புகள் நாட்டின் சகல மாகாணங்களிலும் பரவி காணப்படும் நிலையில், ஜெஸ்டெட்னர் ஒஃவ் சிலோன் பிஎல்சி, மாலைதீவுகளிலும் முன்னணி அலுவலக தன்னியக்க தீர்வுகளை வழங்கும் வர்த்தக நாமமாக திகழ்கிறது. 10,000 க்கும் அதிகமான தன்னிறைவான வாடிக்கையாளர்களை இலங்கையிலும், மாலைதீவுகளிலும் கொண்டுள்ளது. கம்பனி பாரியளவு திட்டங்களை அரசாங்க கல்வி துறையில் வென்றிருந்தது. துறையில் அனுபவம் வாய்ந்த ஊழியர்களை நாடு முழுவதிலும் விற்பனை மற்றும் சேவை பிரிவுகளில் கொண்டுள்ளது. அத்துடன், பல்தேசிய நிறுவனங்களுடன் நெருக்கமான உறவுகளையும் 15 ஆண்டுகளுக்கு மேலாக பேணி வருகிறது. அத்துடன், தடங்கலில்லாத செயற்பாடுகளையும், பொருட்களையும் வழங்கி வினைத்திறன் மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றை உறுதி செய்து வருகிறது.
வாடிக்கையாளர்களின் தன்னிறைவை உறுதி செய்யும் வகையில், விற்பனைக்கு பிந்திய சேவைகளை வாடிக்கையாளர்களின் பகுதிகளுக்கே சென்று வழங்கும் வலையமைப்பை வழங்கி வருகிறது. அத்துடன், ஆகக்குறைந்த உறுதியளிப்பு நேரத்தினுள் சேவைகளை வழங்குகிறது. இதில் பல மொழிகளில் அழைப்புகளுக்கு பதிலளிக்கும் தொலைபேசி நிலையத்தை கொண்டுள்ளதன் மூலமாக நாட்டின் வௌ;வேறு பிரதேசங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் அமைந்துள்ளது. பிரதான நகரங்களில் காணப்படும் அதிகளவு பயிற்சிகளை பெற்ற தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் உத்தரவாத காலப்பகுதியினுள் இலவச சேவைகளையும் வழங்கி வருகிறது.
விற்பனைக்கு பிந்திய சேவைகளை பொறுத்தமட்டில், பயன்படுத்தும் பொருட்கள், உதிரிப்பாகங்கள் மற்றும் சாதனங்கள் போன்றன அசலாக அமைந்துள்ளதுடன், நாடு முழுவதும் பரந்தளவில் காணப்படுவனவாக அமைந்துள்ளன. இவற்றை அங்கீகாரம் பெற்ற விநியோகத்தர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். இதன் தயாரிப்புகள் துறையில் பிரதியிடலுக்கு காணப்படும் ஆகக்குறைந்த செலவீனத்தை கொண்ட மிகவும் சிக்கனமானதாக அமைந்துள்ளன. ஜெஸ்டெட்னர் மூலமாக உத்தரவாதத்துடன் கூடிய உடனடியான அடுத்த நாள் வழங்கப்படும் விநியோக சேவை, நாடு முழுவதும் பரந்த வலையமைப்பு ஆகியன காணப்படுகின்றன. மாலைதீவுகளிலும் இரு விநியோகத்தர்கள் காணப்படுகின்றனர். இலங்கையின் சகல மாகாணங்களிலும் ஆளுமை பொருந்திய தொழில்நுட்ப ஊழியர்கள் காணப்படுகின்றனர்.
நிதி உறுதித்தன்மையை பொறுத்தமட்டில், கம்பனி வருடாந்த அடிப்படையில் ஐந்து ஆண்டுகளில் பெருமளவு வளர்ச்சி கண்டுள்ளது. மீளாய்வு செயற்பாடுகளுக்காக நிதிகள் பரந்தளவில் காணப்படுகின்றன. வலுவூட்டல் மற்றும் செயற்படுத்தல் நடவடிக்கைகளுக்காக தனது ஊழியர்கள், பங்குதாரர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை அர்ப்பணித்துள்ளது.
பங்குதாரர்களுக்கு சிறந்த பங்கிலாபங்களை வழங்கியிருந்ததுடன், புகழ்பெற்ற வங்கிகள் மற்றும் வெளிநாட்டு பங்காளர்களுடன் உறுதியான வியாபார உறவுகளை கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக பேணி வந்துள்ளது.
இலங்கையில் காணப்படும் முன்னணி அலுவலக தன்னியக்க தீர்வுகள் வழங்குநராக ஜெஸ்டெட்னர் அமைந்துள்ளது, 70 ஆண்டுகளுக்கு மேலாக நம்பிக்கையை வென்ற தயாரிப்புகளை சந்தைப்படுத்தி வருகிறது. நாட்டின் முதல் தர அலுவலக தன்னியக்கத்தீர்வுகளை வழங்கும் வர்த்தநாமமாக திகழ்கிறது.
1 hours ago
2 hours ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
6 hours ago