Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 மே 22 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதுகாப்பான இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல்கள் கேபிள்ஸ்கள உற்பத்தி விநியோகத்தில் ஈடுபடும் முதல் தர வர்த்தக நாமமான களனி கேபிள்ஸ் பிஎல்சி நிறுவனம், கொழும்பு மாவட்ட வெல்டிங் முகவர்களுக்காக முன்னெடுத்திருந்த ஒன்றுகூடல் நிகழ்வு கிரிபத்கொட க்ளாரியன் ஹோட்டலில் இடம்பெற்றது.
களனி கேபிள்ஸ் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான களனி வெல்டிங் கேபிள்ஸ் விற்பனை முகவர்கள், CIMCO Metal ஆகியோர் இந்த நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இந்நிகழ்வில் களனி கேபளி;ஸ் பிஎல்சி சந்தைப்படுத்தல் பிரவின் பொது முகாமையாளர் அனில் முனசிங்க பிரதம அதிதியாக பங்கேற்றிருந்தார்.
களனி கேபிள்ஸ் உதவி விற்பனை முகாமையாளர் கிஹான் பெர்னான்டோ மற்றும் விற்பனை ஊக்குவிப்பு அதிகாரி உத்திக விஜேசிங்க ஆகியோர் கம்பனி சார்பாக விருந்தினர்களை வரவேற்றிருந்தனர்.
களனி கேபிள்ஸ் பிஎல்சி சந்தைப்படுத்தல் பிரிவின் பொது முகாமையாளர் அனில் முனசிங்க கருத்து தெரிவிக்கையில், 'களனி வெல்டிங் கேபிள்ஸ் என்பது, கடந்த ஆறு வருடங்களாக வெல்டிங் துறையில் முன்னணி நிலையை எய்தியுள்ளது. அர்ப்பணிப்பான விற்பனை செயலணியினரின் செயற்பாட்டின் மூலமாக இந்த நிலையை வேகமாக எய்த முடிந்தது. கொழும்பு மாவட்டத்தில் வெல்டிங் கேபிள்களை பயன்படுத்தும் பெருமளவு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்றன காணப்படுகின்றன. எனவே எமது பிரதான சந்தை வாய்ப்பில் இது பெருமளவு பங்களிப்பை வழங்குகிறது. உயர் தரம் வாய்ந்த வெல்டிங் கேபிள்கள் இறக்குமதி செய்யப்பட்டு இந்த தேவை நிவர்த்தி செய்யப்படுகின்றது. களனி கேபிள்ஸ் செப்பு கம்பிகளை இறக்குமதி செய்து, இந்த உயர் தரம் வாய்ந்த தயாரிப்பை உற்பத்தி செய்து விநியோகிக்கின்றது. உலகின் முன்னணி செப்பு சுரங்கங்களிலிருந்து இந்த கம்பிகள் பெறப்படுகின்றன. வாடிக்கையாளர்களுக்கு இந்த செய்தியை கொண்டு செல்வதில் எமது விற்பனை முகவர்கள் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றனர். களனி கேபிள்ஸ் சார்பாக நான் கொழும்பு மாவட்ட விற்பனை முகவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
Cimco Metal முகாமைத்துவ பணிப்பாளர் ரவி சங்கர் கருத்து தெரிவிக்கையில், 'கொழும்பில் களனி வெல்டிங் கேபிள்ஸ் விற்பனையின் மூலமாக பெறப்பட்ட தாக்கம் தொடர்பில் எமது விற்பனை முகவர்கள் தெளிவான புரிந்துணர்வை கொண்டுள்ளனர். எனவே, இந்நிகழ்வை களனி கேபிள்ஸ் பிஎல்சி ஏற்பாடு செய்துள்ளமையை நான் வரவேற்கிறேன், குறிப்பாக கொழும்பு பிராந்தியத்தின் தனது அர்ப்பணிப்பான விற்பனை செயலணியை கௌரவிக்க தீர்மானித்தது வரவேற்கத்தக்கது' என்றார்.
களனி வெல்டிங் கேபிள்கள் உற்பத்திக்கு பயன்படும் செப்பு மூலப்பொருட்கள், அவுஸ்திரேலியா மற்றும் எகிப்து போன்ற நாடுகளின் சிறந்த செப்பு சுரங்கங்களிலிருந்து பெறப்படுகின்றன. எனவே இவை சான்றளிக்கப்பட்ட நியமங்களை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளன. களனி வெல்டிங் கேபிள்ஸ் உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்படும் இந்த உயர் தர செப்பு என்பது, 16 மில்லிமீற்றர் முதல் 95 மில்லிமீற்றர் வரை அமைந்துள்ளதுடன், அவற்றின் மூலம் நாட்டின் வௌ;வேறு உருக்கிரும்பு செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும் வகையில் அமைந்துள்ளன.
நூற்றுக்கு நூறு வீதம் இலங்கையின் கம்பனியாக கடந்த நான்கு தசாப்த காலமாக களனி கேபிள்ஸ் திகழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கம்பனி 'Super Brands' தரத்தை இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பாடல் துறையில் 2008 ஆம் ஆண்டில் எய்தியிருந்ததுடன், துறையில் நிபுணத்துவத்தை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 2012 இல், களனி கேபிள்ஸ் பிஎல்சி நிறுவனத்துக்கு சிறந்த வர்த்தக நாமத்துக்கான வெண்கல விருது வழங்கப்பட்டிருந்தது. SLITAD மக்கள் அபிவிருத்தி விருதுகள் வழங்கலின் போது, பயிற்சிகள் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக களனி கேபிள்ஸ் பிஎல்சி 2013ஆம் ஆண்டில் தங்க விருதையும் பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
களனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு தரச்சிறப்புக்கான ISO 9000:2008 சான்று, சிறந்த சூழல் முகாமைத்துவத்துக்கான ISO 14001:2004 தரச்சான்றும் வழங்கப்பட்டுள்ளன. தய்கி அகிமொடோ 5S விருதுகளின் தங்க விருதும் களனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
5 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
9 hours ago