A.P.Mathan / 2015 மே 23 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

மூன்று தசாப்த காலப்பகுதிக்கு மேலாக வெவ்வேறு பிரிவுகளில் தனது செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுத்து வரும் நிறுவனமாக சியோகா (பிரைவேற்) லிமிடெட் திகழ்கிறது. இதற்கமைய, இலங்கையில் முன்னணி மின்காப்பு தொழில்நுட்ப (Insulation) தீர்வுகளை இறக்குமதி செய்து விநியோகிக்கும் நடவடிக்கைகளுக்காக சந்தை முன்னோடியாக சியோகாவின் பொறியியல் பிரிவு செயலாற்றி வருகிறது. இலங்கை மற்றும் மாலைதீவுகள் ஆகிய நாடுகளில் வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் இந்த பிரிவு, சர்வதேச வர்த்தக நாமங்களிலமைந்த சான்றளிக்கப்பட்ட மின்காப்பு தயாரிப்புகளை வழங்குவதில் புகழ்பெற்று திகழ்கிறது.
கம்பனியின் சந்தை செயற்பாடுகள் தொடர்பில் மின்காப்பு தயாரிப்புகளுக்கான பதில் பொது முகாமையாளர் கே. தினேஷ் கருத்து தெரிவிக்கையில், 'சியோகா பொறியியல் பிரிவு என்பது அதிகளவு வினைத்திறன் வாய்ந்த மின்காப்பு தீர்வுகளை சந்தையில் வழங்குவதில் புகழ்பெற்று திகழ்கின்றன. எமது வாடிக்கையாளர்கள் நாம் வழங்கும் உறுதியான வாடிக்கையாளர் உதவி சேவைகள் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர் அத்துடன் அதிகளவு கேள்விகள் காணப்படும் சூழல்களில் பயன்படுத்தலின் மூலமாக உறுதியான பொருட்களின் வினைத்திறன்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன' என்றார்.
இன்று வரை சியோகாவினால் வழங்கப்படும் மின்காப்பு தொடர்பான தயாரிப்புகள் உட்கட்டமைப்பு திட்டங்களான பிரத்தியேக மற்றும் தொழிற்துறைசார்ந்த கூரைகள், வலுத் திட்டங்கள், பெற்றோலிய பொருட்கள், கப்பல் பழுதுபார்ப்புகள், ஒலிவெளியிடலை கட்டுப்படுத்தும் ஜெனரேற்றர்கள், தொழிற்சாலை வெப்பமூட்டிகளுக்கான மின்காப்புகள், கொதி நீர் மற்றும் குளிரூட்டப்பட்ட நீர் விநியோகம், கேட்போர் கூடங்கள் மற்றும் சினிமா ஒலிவெளியிடலை கட்டுப்படுத்தல்கள், வெப்பமேற்றிகள் மற்றும் மின்னடுப்புகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.
சியோகாவினால் விநியோகிக்கப்படும் மின்காப்பு தயாரிப்புகளில் Glass wool, Rockwool, Nitrile Rubber Insulation, Extruded Polystyrene, Aluminum Foil, B.R.C. Welded Mesh போன்றன உள்ளடங்கியுள்ளன.
அதிகரித்துச் செல்லும் கேள்விகளை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த தயாரிப்புகள் அமைந்துள்ளன. வெப்பத்தை கடத்துவதில் காணப்படும் தடை, மேம்படுத்தப்பட்ட ஒலிக்குரிய வினைத்திறன் மற்றும் தீக்கு எதிரான சிறந்த பாதுகாப்பை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.
கட்டிடங்களில் காணப்படும் வெப்ப மின்கடத்தல்கள் மூலமாக வெப்பம் கடத்தப்படுவது கட்டுப்படுத்தப்படுவதுடன், சீரான மற்றும் தூய்மையான உள்ளக காலநிலையை பேண உதவியாக அமைந்துள்ளது. வணிக மற்றும் குடியிருப்புகளில் காணப்படும் வினைத்திறன் வாய்ந்த மின்கடத்தல் முறைகள் மூலமாக வெப்பமேற்றல் மற்றும் குளிரவைத்தல் கட்டணப்பட்டியல்களில் பெருமளவு பணத்தை மீதப்படுத்திக் கொள்ள உதவியாக அமைந்திருக்கும். அத்துடன் வளி கசிவதை கட்டுப்படுத்தி வெப்பம் சீராக பயணிப்பதை உறுதி செய்கின்றது.
ஒலிக்குரிய மின்கடத்தல் மூலமாக ஒலி ஒழுங்குபடுத்தல் மற்றும் ஒலி புகவிடாத தீர்வுகளை வழங்கப்படுகிறது. இதன் மூலம் அதிகளவு வெளிப்புற அல்லது உள்ளக ஒலி இரைச்சல் கட்டுப்படுத்தப்படுகிறது. ஒலி மாசடைதலை கட்டுப்படுத்தப்படுத்துவதற்கு மிகவும் வினைத்திறன் வாய்ந்த மாதிரியாக மின்கடத்தல் முறை அமைந்துள்ளது, ஏனெனில் இது இயற்கையானதும் வினைத்திறன் வாய்ந்ததுமான ஒலிக்கட்டுப்படுத்தியாக அமைந்துள்ளது.
மின்கடத்தல் தீர்வுகள் மூலமாக சிறந்த ஒலி வாங்கல்கள் இடம்பெறுவதுடன், இவை வெளியிலிருந்து வீடுகள், அலுவலகங்கள் மற்றும் வணிக கட்டடங்களினுள் ஒலி நுழைவதை கட்டுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. இதன் மூலம் அமைதியான சூழல் வாழ்வதற்கும் பணியாற்றுவதற்கும் ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
Glass wool மற்றும் Rock wool மின்கடத்திகள் போன்றன தீ கட்டுப்படுத்திகளாக செயலாற்றும் தன்மை வாய்ந்தவை. இவற்றின் மூலம் தீ பரவுவது கட்டுப்படுத்தப்படும். இதன் மூலமாக மக்களையும், பொருட்களையும் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதுடன், சூழலுக்கான பாதிப்புகளையும் குறைத்துக் கொள்ளலாம். இவை பெருமளவில் சுவர்கள், கூரைகள் மற்றும் உயர்ந்த வளி உள்வரும் பகுதிகளில் அல்லது வணிக கட்டடங்களில் வைக்கப்படுகின்றன.
சியோகாவின் மின்கடத்தல் தயாரிப்புகள் பரந்தளவு பல்வேறு ஆப்ளிகேஷன்களுக்கு பொருத்தமானதாக (flexible, semi rigid, rigid) அமைந்துள்ளன. இவற்றை இலகுவாக வெட்டி நிறுவிக் கொள்ள முடியும். குறைந்தளவு விரயத்துடன் இவற்றை நிறுவ முடியும். சியோகாவினால் வாடிக்கையாளர்களுக்கு lightweight, flexible rolls, semi rigid மற்றும் rigid மட்டைகள் வழங்கப்படுகின்றன. இவை சர்வதேச நியமங்களுக்கமைய அமைந்துள்ளன.
இந்த நிலையை புரிந்து கொண்டு, சூழலுக்கு பொறுப்பு வாய்ந்த கட்டட அலங்காரம், நிர்மாணம் மற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. வினைத்திறன் வாய்ந்த, சகாயமான மற்றும் வசதியான கட்டடங்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் சியோகா நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன.
'மக்களின் வசதி, சுகாதாரம் மற்றும் வலு கட்டப்பட்டியல்கள் போன்றவற்றில் குறிப்பிடத்தக்களவு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மின்கடத்தல் முறை என்பது அமைந்துள்ளது' என தினேஷ் மேலும் குறிப்பிட்டார். 'எமது மின்கடத்தில் தயாரிப்புகள் வலு சிக்கனம் தொடர்பில் உயர்ந்தளவு துறைசார் தரங்களை கொண்டதாக அமைந்துள்ளன. அத்துடன் கட்டடங்களுக்கு வலுச்சிக்கனம் வாய்ந்த தீர்வுகளை பெற்றுக் கொடுக்க உதவியாக அமைந்துள்ளது. வலு மற்றும் காபனீரொட்சைட் சேமிப்புகள் தொடர்பில் பொருளாதார ரீதியில் இலாபங்களை பெற்றுக் கொடுக்கக்கூடிய வகையில் மின்கடத்தல் முறை அமைந்துள்ளது' என்றார்.
உயர் தரம் வாய்ந்த வாடிக்கையாளர் உதவிகளை வழங்க அர்ப்பணித்துள்ள சியோகா மின்கடத்தல் அணி என்பதன் மூலமாக நிபுணத்துவ ஆலோசனை என்பவற்றின் மூலமாக சகல பொருட்கள் மற்றும் தீர்வுகள் பற்றிய அர்ப்பணிப்பாக அமைந்துள்ளது. இதில் பொது ஆலோசனை, குறித்த திட்டம் தொடர்பான தொழில்நுட்ப கணிப்பீடு அல்லது களத்திலான உதவி போன்றன உள்ளடங்கியுள்ளன. சியோகா மின்கடத்தல் அணியில் நிபுணத்துவம் மற்றும் அனுபவம் ஆகியன உள்ளடங்கியுள்ளதுடன், நவீன தொழில்நுட்பத்தின் பின்புலமும் காணப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .