Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 மே 27 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமது பாவனையாளர்களுக்கு சிறந்த வசதிகளைப் பெற்றுக் கொடுக்கும் பொருட்டு லபார்ஜ் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் 'சவிபியச' வேலைத் திட்டத்தின் ஊடாக புதிய வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான கட்டட நிர்மாணம் தொடர்பான தொழில்நுட்ப அறிவினை லபார்ஜ் நிறுவனம் வழங்கி இதனை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றது. இந்த வேலைத் திட்டத்தை மேலும் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் மேற்கொள்வதற்காக 9 வர்த்தக நாமங்களும் இரு வர்த்தக வங்கிகளும் லபார்ஜ் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
லபார்ஜ் சர்வதேச நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் 'சிறந்த நகரங்களை உருவாக்குதல்' (Building better cities) என்ற தொனிப் பொருளில் உலகிலுள்ள பெரும்பாலான குடும்பங்களுக்கு தற்போது பல்வேறு உதவிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன. 2020ஆம் ஆண்டளவில் 2 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு விலைகொடுத்து வாங்கக் கூடிய அளவிற்கு சிறந்த வீடுகளை அமைத்துக் கொடுப்பதே இந்த வேலைத் திட்டத்தின் நோக்கமாகும். அதனூடாக பொதுமக்கள் தமது வாழ்க்கைச் சூழலை சிறந்த விதத்தில் அமைத்துக் கொள்வதற்கு வசதியாக அமையும்.
எதிர்காலத்தில் லபார்ஜ் மகாவலி சீமேந்து நிறுவனம் வர்த்தகத் துறையில் முன்னணியில் திகழும் நாமங்களுடன்; தொடர்புகளைப் பேணி வருவதன் ஊடாக இரும்பு, மின் உபகரணங்கள், வண்ணம், கண்ணாடிப் பொருட்கள், PVC குழாய்கள் போன்ற கட்டடப் பொருட்களை விசேட நிவாரண விலைகளுக்கு 'சவிபியச' வேலைத் திட்டத்தை முன்னெடுப்போருக்கு பெற்றுக் கொடுப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதுடன் நிதி நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளமையால் பாவனையாளர்களுக்கு வேண்டிய கடன் வசதிகளையும் துரிதமாக பெற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த லபார்ஜ் சீமேந்து நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் அநுராக் காக், 'பல வருடங்களுக்கு முன்னர் நாம் ஆரம்பித்த இந்த வேலைத் திட்டத்திற்கு சிறந்த வரவேற்பு கிட்டியுள்ளதுடன் விசேட கழிவுகள் மற்றும் நிதி வசதிகளின் கீழ் வீட்டு நிர்மாண வேலைத் திட்டம் ஒன்றை இந்த நாட்டில் மேற்கொள்ள கிடைத்த முதலாவது சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது லபார்ஜ் நிறுவனமாகும். அதனால் தமது திட்டத்திற்கு அமைவாக நிர்மாணிக்கப்பட்ட உயர் தரத்திலான வீடுகளைப் பெற்றுக் கொள்ளக் கிடைக்கின்றமை தனிப்பட்ட ஒருவருக்கு அவரது மனப் பாரத்தை குறைக்கும்.' என அவர் தெரிவித்தார்.
லபார்ஜ் 'சவிபியச' திட்டத்திற்கு, PVC எஸ்லோன், ஒரேன்ஜ் இலெக்ரிகல்ஸ், யானை மஸ்கணைட், நிப்போன் பெய்ன்ட், இலங்கை உருக்குக் கூட்டுத்தாபனம், ரொசெல், அசோக் கிளாஸ் மற்றும் Frostaire ஆகிய நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
Habitat for humanity என்ற அரசசார்பற்ற நிறுவனம் லபார்ஜ் நிறுவனத்துடன் இணைந்து இலங்கையின் பல்வேறு பகுதிகளில் உள்ள தமது உறுப்பினர்களுக்கு நிவாரண விலைக்கு வீடொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதுடன் அதற்காக நம்பகரமான பெயரைக் கொண்ட நிதி நிறுவனமான செலான் வங்கி மற்றும் ஹட்டன் நஷனல் வங்களின் ஒத்துழைப்புகளை வழங்க முன்வந்துள்ளன.
39 minute ago
51 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
51 minute ago
8 hours ago