Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 மே 27 , பி.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹேமாஸ் மெனுஃபெக்ஷரிங் நிறுவனத்தின் முன்னணி டிடர்ஜன்ட் வர்த்தக நாமமான தீவா, தனது வாடிக்கையாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மாற்றியமைக்கும் வகையில், வருடாந்தம் முன்னெடுக்கும் மாபெரும் வாடிக்கையாளர் ஊக்குவிப்பு திட்டமான 'தீவா காணி அதிர்ஷ்டம்' நிகழ்வை தொடர்ச்சியான ஐந்தாவது வருடமாகவும் ஹோமாகம பிரதேசத்தில் முன்னெடுத்திருந்தது.
மிகவும் புகழ்பெற்ற இந்த ஊக்குவிப்பு திட்டமானது ஜுலை மாத இறுதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது. தீவா 'காணி அதிர்ஷ்டம்' நுகர்வோர் ஊக்குவிப்பு திட்ட அணி, நகரங்களிலும் கிராமங்களிலும் தமது விஜயங்களை மேற்கொண்டு, நுகர்வோருக்கு இந்த திட்டம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளனர்.
ஊக்குவிப்பு வண்டியில் தீவா பக்கற்றினை கொள்வனவு செய்யும் நுகர்வோர் கொழும்பை அண்மித்து காணியொன்றை வெல்வதற்கான வெற்றி வாய்ப்பு இரட்டிப்படைகிறது. ஊக்குவிப்பு வண்டி அமைந்திருக்கும் தளத்தில் கூப்பன்களை நிரப்பி வழங்கும் நுகர்வோருக்கு ஸ்தலத்திலேயே ரீ-சேர்ட்கள் மற்றும் குடைகள் போன்ற உடனடிப் பரிசுகள் வழங்கப்பட்டிருந்தன. நுகர்வோர்கள் தீவா மேலுறைகளை தபால் பெட்டி இல. 1289, கொழும்பு எனும் முகவரிக்கு அனுப்புவதன் மூலமாக இந்த திட்டத்தில் பங்குபற்ற முடியும்.
காணிகளை வெல்லும் 3 வெற்றியாளர்கள் மாதந்தம் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், தீவா வாடிக்கையாளர்களுக்கு தங்க நாணயங்களை வாராந்த அடிப்படையிலும், 10,000 ரூபாய் பணப்பரிசுகளை நாளாந்த அடிப்படையில் வெற்றியீட்டுவதற்கான வாய்ப்பும் வழங்கப்படும்.
'நுகர்வோரின் வாழ்வை வளப்படுத்தும் முன்னுதாரணமான வர்த்தகநாமமாக தீவா விளங்குகிறது. பெருமைக்குரிய நுகர்வோர் அடிப்படையிலமைந்த புகழ்பெற்ற டிடர்ஜன்ட் உற்பத்தி எனும் ரீதியில், கடந்த காலங்களில் இவ்வர்த்தகநாமமானது மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடிய விடங்களை வழங்கும் நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்தியுள்ளது' என ஹேமாஸ் மெனுபக்ஷரிங் நிறுவனத்தின் தீவா வர்த்தகநாம முகாமையாளர் ஷானக பிரனாந்து தெரிவித்தார்.
'இந்த செயற்திட்டம் ஊடாக, இலங்கையர் வாழ்வின் அனைத்து தருணங்களிலும் பெருமைக்குரிய நுகர்வோர் எனும் கௌரவம் வழங்கப்படுவதை உறுதி செய்வதே எமது குறிக்கோளாகும்' என மேலும் அவர் தெரிவித்தார். எமது நாளாந்த வாழ்க்கையை சிறப்பாக மாற்றியமைக்கும் அதன் உறுதிப்பாட்டினை தீவா தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
தீவா தற்போது வொஷிங் பவுடர் தெரிவுகளை கொண்டுள்ளது, தீவா ரெகியுலர் என்பது எலுமிச்சை நறுமணத்தை கொண்டுள்ளது. தீவா ஃபிளவர்ஸ் என்பது ரோஜா மற்றும் எலுமிச்சை மற்றும் மல்லிகை மற்றும் எலுமிச்சை ஆகிய நறுமணங்களில் காணப்படுகின்றன. மேலும், புதிய மேம்படுத்தப்பட்ட தீவா சவர்க்கார தெரிவுகளையும் தீவா கொண்டுள்ளது. இவை எலுமிச்சை, மல்லிகை ஆகிய நறுமணங்களில் காணப்படுகின்றன. தீவா வைட் பவர் டிடர்ஜன்ட் பவுடர் நாட்டின் முன்னணி சுப்பர் மார்க்கெட்களில் கிடைக்கின்றன. இதன் மூலமாக சலவை இயந்திரங்களின் மூலமான கழுவுதலுக்கும் சிறந்ததாக அமைந்துள்ளது. தீவா மூலமாக, திரவ நீல தயாரிப்புகளும் வழங்கப்படுவதால், பரிபூரண கழுவல் தீர்வுகள் தீவாவினால் உறுதி செய்யப்பட்டுள்ளன.
2 hours ago
3 hours ago
20 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
20 Sep 2025